Saturday 19 June, 2010

மழையும் கொடூர யோசனைகளும்…

மழை வந்துச்சுன்னா மழையிலயிருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு ஏதோ என்னோட குட்டி களிமண்ணுல ச்சீ… மூளையில தோணின சில யோசனைகள்…


கொடூர யோசனை#1:


காலையில எந்திரிக்கும் போது மழை வந்துகிட்டு இருக்கு. ஆஃபீஸ் போலாமா வேணாமானு ஒரு பெரிய சந்தேகம். அது தினமும்தான் இருக்கும். இன்னைக்கு மழை வேற வருது. உடனே நீங்க உங்க TL, மேனேஜர், Team mates எல்லார்க்கும் கால் பண்ணி நான் இன்னைக்கு கண்டிப்பா ஆஃபீஸ் வருவேன்னு சொல்லிடுங்க. முடிஞ்சா வீட்டுக்கு வெளிய வந்து நின்னு சத்தம் போட்டு கூட சொல்லுங்க மழைக்கு கேக்குற மாதிரி. சொல்லிட்டு கபால்னு போய் இழுத்து போர்த்தி தூங்கிடுங்க.
நீங்க வெளிய வருவீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்து மழை ஏமாந்து போகும்ல?
************************************************************************************



கொடூர யோசனை#2:


ஐடியா 1னோட உல்ட்டா. கால் பண்ணி ‘இன்னைக்கு நான் ஆஃபீஸ் வர மாட்டேன்’னு சொல்லிட்டு திடீர்னு கிளம்பி ஆஃபீஸ் போய்டுங்க.
நீங்க இன்னைக்கு ஆஃபீஸ்க்கு லீவ்னு நினைச்சுகிட்டு இருந்த மழை ஏமாந்து போகும்ல?
************************************************************************************



கொடூர யோசனை#3:


மழை வந்ததும் போய் உங்க வீட்டு கதவு கிட்ட ஒளிஞ்சுக்கோங்க. அப்புறமா திடீர்னு வெளிய வந்து மழைய தொட்டு ‘ஐஸ், ஐஸ்’னு கத்துங்க. அப்போ மழையே மறுபடி ‘OUT’ ஆயிடும். அப்புறம் மறுபடி அது 1..2..3 count பண்ண போயிடும்ல?
************************************************************************************



கொடூர யோசனை#4:


மழையின் முக்கியமான நொக்கமே நம்மளை நனைக்கிறதுதான். அதனால நீங்க அஃபீஸ்க்கு கிளம்பி, நல்ல neatஆ அயர்ன் பண்ணி டிரஸ் போட்டுகிட்டு நேரா போய் ஷவர்ல நின்னோ இல்லையின்னா ஒரு பக்கெட் தண்ணிய எடுத்து ஊத்தியோ உங்களை ஃபுல்லா நனைச்சுக்கோங்க. துளி கூட நனையாம இருக்கக்கூடாது. ஓ.கே வா? அப்படியே கிளம்பினீங்கன்னா மொதல்லயே நனைஞ்ச உங்கள நனைக்க முடியாம மழை ஏமாந்து போகும்ல பாவம்? ஆனா நீங்க முழுசா நனையாம வெளிய வந்தீங்கன்னா மழைக்கு கொண்டாட்டம்தான்.
************************************************************************************



கடைசியா கொடூர யோசனை#5:


‘ஒழுங்கா போயிடு. இல்லையின்னா இந்த போஸ்ட்ட printout எடுத்து (மழையில) நனைச்சு உன்னை படிக்க வெச்சிருவேன்’னு மிரட்டுங்க. அப்புறம் பாருங்க……   
 இதைப்படிச்சதுமே உங்களுக்கு எனக்கு ஏதாவது குடுக்கணும் போல தோணும். உங்க அன்புக்கு நன்றி.மக்களே எதுவாயிருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். தீர்த்துட்டா அப்புறம் பேச முடியாது பாருங்க.  ஹோக்கே???


இன்னும் இது மாதிரி பல பல யோசனைகள் இருக்கு. நீங்க ஓ.கே சொன்னா அடுத்தடுத்த பதிவுகள்ல வழங்கிடறேன். என்ன சொல்றீங்க? டீலா? நோ டீலா???

1 comment:

  1. கொடூர யோசனை #6 : (!)

    உன் இடுகைகளை இன்னும் பலர் படித்து 'பலன்' பெற,
    திரட்டிகளில்(Blog aggregators) உனது வலைப்பூவை இணைத்தால் உதவியாக இருக்கும் நண்பா !
    தமிலிஷ், தமிழ்மணம்,உலவு,திரட்டி,தமிழ் 10 , நம்குரல் என்று பல திரட்டிகள் உள்ளன !
    என் வலை தலத்தில் , சைடு பாரில் ' நன்றி ' என்று இமேஜ் லிங்க் இருக்கும் - அதை சொடுக்கிப் பார்க்கவும் !

    அப்புறம் கமென்ட் போடும் பொது வரும் WORD VERIFICATION ஆப்சனை எடுத்து விட்டால் , கொஞ்சம் நல்லாயிருக்கும் !

    ReplyDelete