இடம்:சோழங்கநல்லூர் சந்திப்பு.
நாள்: ஒரு திங்கட்கிழமை
அது நான் நாவலூர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த நேரம். அப்பொழுதெல்லாம் நானும் எனது மதுரைக்கார நண்பனும் அவனது 'splendor +'ல் தான் அலுவலகம் போவோம்.காலையில் நான் ஓட்டிப்போவேன், மாலையில் அவன் ஓட்டி வருவான்.(பெட்ரோல் அவனே போட்டுப்பான். பாசக்கார பய)
அன்றும் அப்படிதான் அலுவலகம் போய்க்கொண்டிருந்தோம். சோழங்கநல்லூரில் புதிதாக சிக்னல் பொருத்தப்பட்ட நேரம்.
ECR link road OMRல் இணையும் இடம். தினமும் அந்த வழியேதான் வருவோம். அன்றுதான் சிக்னல் workஆக ஆரம்பித்து இருந்தது.
சிக்னலில் சிகப்பு. அதனால் அது Free left ஆ இல்லையா என்பதில் எனக்கு குழப்பம்.
உடனே நான் பின்னாலிருந்த நண்பனிடம்" டே இது Free leftஆ இல்லயா?" எனக் கேட்டது அவன் காதில் விழுந்ததோ இல்லயோ. அங்கிருந்த கான்ஸ்டபில் காதில் நன்றாகவே விழுந்தது.(ஆஹா. சிக்கிட்டானுங்க அடிமைங்க)
நான் வண்டியை நிறுத்திதான் நண்பனிடம் கேட்டுக்கொண்டு இருந்தேன். அவன் " Free leftதான் டா. யேன் நிறுத்துற? விடு போலாம்" என்றான்.
அதற்குள் கேப்டன் தேவாரம்(கான்ஸ்டபில்) வந்துவிட்டார்.
"அதான் சிக்னல் போட்டு இருக்குள்ள. எங்க போற நீ?"
நண்பன்: "சார் இது Free left தானே?"
தேவாரம்: "என்ன நீ ரூல்ஸ் லாம் பேசுறே? வண்டிய ஓரங்கட்டு"(மாட்னோம்டா மாப்ள)
ஓரங்கட்டினா அங்க வெள்ளையும் சொள்ளையுமா இன்னொருத்தர். (ஆபீசராமா!!!)*வண்டி யாருது? லைசென்ஸ் இருக்கா?
*பேப்பர்ஸ் இருக்கா? னு எல்லார்கிட்டயும் கேக்குற அதே கேள்விய கேட்டார்.
நானும் எல்லாம் கொடுத்தேன். வாங்கி வெச்சுகிட்டாரு.
"500ரூபா ஃபைன் கட்டிட்டு வாங்கிட்டு போ" என்றார்.(நாட்டாமை… தீர்ப்ப மாத்து)
"சார் நாங்க போகல. Free leftஆ இல்லயானு நின்னு பேசிட்டு இருந்தோம். அவ்ளோதான்" என்றேன் நான்.
"அதெல்லாம் தெரியாது. நான் இன்ஸ்பெக்டர்க்கு சொல்லிட்றேன். நீங்க அவர் கிட்ட பேசிக்கோங்க"
என்று outgoingஏ போகாத Mobileல் பந்தாவாக நம்பர் டயல் செய்தார்.
அய்யய்யோ!! இருக்குற ரெண்டே இப்டி உயிர வாங்குதுங்க. இதுல பெரிய பூதம் வேற வரணுமா?
"சார் சார்! வேணாம் சார் ! வேணாம் சார்!" என பதுங்கினோம்.
"அப்டினா 100ரூபா கொடுத்துட்டு கெளம்புங்க" என மொய்க்கணக்கு எழுத சொன்னார்.(பக்கத்தில் இன்னொருவன் லைசென்ஸ் இல்லாமல் 200 ரூபாய் மொய் எழுதிக்கொண்டு இருந்தான்)
நாங்கள் யோசிப்பதற்குள், "நீங்க இன்ஸ்பெக்டர் கிட்டயே பேசிக்கோங்க பா" என மறுபடியும் "சென்னை-28 சிவா" ஸ்டைலில் மொபைலில் நம்பர் டயல் செய்தார்.
வேறு வழி இல்லாமல், 100 ரூபாயைய்க் கொடுத்தோம். (இன்னைக்கு யார் மூஞ்சில முழிச்சேன்?)
"சார் வெளியூர் பசங்க. சிக்னல் எப்டினு தெரியாமதான் இப்டி பன்னிட்டோம். பெட்ரோல் போட கூட காசு இல்ல சார்." என நண்பன் செண்டிமெண்டாக bittu போட.
ஆபீசரின் கல் மனதில் ஈரம் கசிந்து 50 ரூபாயை திருப்பி கொடுத்தார்.கடைசியாக கிளம்பும் போது "வெளியூர் பசங்க, எங்கயாவது மோதி அடி பட்டுட்டா? அப்புறம் உங்க அப்பா அம்மாக்கு யாருப்பா பதில் சொல்வா? அதுக்காகதான் நாங்க இப்டிலாம் உங்கள கண்ட்ரோல் பண்றோம்" என்றார். (புத்தி சொல்றாராமா!!!!)
அந்த இடத்தில்தான் தமிழக காவல்துறை தனது தனித்தன்மையைக் காட்டி நின்றது.
சம்பவம் 2
No comments:
Post a Comment