Sunday 13 June, 2010

இரண்டு கவிதைகள் - 3...

தேவதை விளையாட்டு...



நேற்று நீ கேட்டதற்காக திடீர் சந்திப்பு
என்னைப் பார்த்ததில் உனக்கு அவ்வளவு மகிழ்ச்சி
ஐஸ்கிரீம் பார்த்த சிறுபிள்ளை போல…

போன சனிக்கிழமை முழுக்க உன்னுடன் ஊர் சுற்றியது
எதுவுமே நடக்காதது போல, வெகுநாட்கள் கழித்து பார்த்தது போல
இது என்ன புதிதா? ஒவ்வொரு முறையும் நீ இப்படித்தான்

கைகோர்த்து நடந்தோம். 5 நிமிட நடையில் சேரும் இடம் அது
ஆனால் 30 நிமிடங்களாக்கினாய் நடையை…
அந்த வித்தை உனக்கு மட்டுமே தெரிந்த ஒன்று

தெருவில் மற்றவர்கள் கண்ணிலோ பொறாமைப்பெருக்கு…
வழக்கமான நமது மரத்தடியில், நான் அமர்ந்தேன்
என் தோள் சாய்ந்தபடி நீயும் அமர்ந்தாய்

சிறிது நேர மவுனம், பிறகு வெகு நேரம் பேச்சு
அனைத்தையும் ரசித்தபடி உன்னுடன் பேசிக்கொண்டிருந்தேன்
பிறகு பிரிய மனமின்றி இருவரும் அவரவர் உறைவிடம் சேர்ந்தோம்

இன்று காலையில்,
“இவனுக்கு முத்திருச்சுடா. ராத்திரி முழுக்க என்னை
பிராண்டிட்டே இருந்தான். தனியா ஏதோதோ பேசினான்டா.
சீக்கிரமே கீழ்ப்பாக்கம் கூட்டிட்டு போகணும்” - அறைத்தோழன் கூற்று

பாவம் அவனுக்கெப்படி தெரியும் தேவதையே? நேற்று நீ என்னுடன் விளையாடியது?
உன் நினைவுகளின் விளையாட்டால் எனக்கு புதிய பெயர் “பைத்தியக்காரன்”

என்னவள்...


உனக்காக எழுதி எழுதித் தீர்ந்துவிட்டதடி
எனது குறிப்பேட்டின் பக்கங்களும் பேனா மையும்,

ஆனால் உன் கண்கள் என்னுள் உண்டாக்கிய தாக்கத்தால்
நான் கிறுக்கிய வரிகளே இன்னும் முடியவில்லையடி

உன்னை முழுக்க கவிதைகளால் கிறுக்கித்தள்ளினால்???
நிச்சயமாய் போதாது, குறிப்பேட்டின் பக்கமோ, பேனா மையோ மட்டுமல்ல
எனது ஆயுளும்தான்,

உனது கண்கள் கவிதையாகவே எனது ஆயுளில் மூன்றில் ஒன்று தீர்ந்துவிட்டதடி
உன்னை முழுவதுமாக கவிதையாக்க எனக்கும் ஆசைதான்
பொறாமை பிடித்த கடவுள் சதி செய்கிறாரே? நான் என்ன செய்ய?

அப்படி நிகழுமெனில் அந்த பொறாமைக் காரனிடம் நிச்சயம் மன்றாடுவேன்
“நீ பூமிக்கு அனுப்பி வைத்த தேவதைக்கு
கடிதம் ஒன்று அனுப்ப வேண்டும்.
மேலோகத்தில் ஒரு தபால் நிலையம் உருவாக்கு” என்று

1 comment:

  1. வீட்டுலதான் நண்பா slow வா இருக்குன்னு நெனைக்கிறேன்..
    நீ கண்டினியூ பண்ணு :)

    ReplyDelete