Sunday, 13 June 2010

இரண்டு கவிதைகள் - 2...



மாடி வீட்டு மூன்றாம் பிறை…

அவளுக்கும் என்னைப் போல பயம்



எங்கே என்னுடன் பேசினால் காதல் வந்துவிடுமோ என்று!
அதனால்தான் பொய்க்கோபத்துடன் முறைக்கின்றாள்
என்னைக் காணும் போதெல்லாம்…

எங்கிருக்கிறாய் என் தேவதையே?


என் நினைவுகள் முழுக்க நீதான் தேவதையே
                    புறமுதுகு காட்டி சிரித்தபடி விளையாடுகிறாய்…

உன் நினைவுகளில் நான் கிறுக்கும் கிறுக்கல்கள்கூட
                   கவிதைகள் ஆகின்றன…

அந்த கிறுக்கல்களை கிறுக்கும் இந்த கிறுக்கன்கூட
                  கவிஞன் ஆகிவிட்டேன்…

நினைவுகளில் என் காதலியாய்,
                 எங்கோ யாருக்கோ(என் மாமனார் மாமியார்) மகளாய்…

நினைவுகளில் முகம் காட்ட மறுக்கும் தேவதையே,
உன் முகவரி தராவிட்டாலும் பரவாயில்லை
        நீ இருக்கும் திசை மட்டும் காட்டு-
அது போதும் எனக்கு அடுத்த கிறுக்கல்களைக் கிறுக்க...

No comments:

Post a Comment