Saturday, 12 June 2010

இரண்டு கவிதைகள்...

எதிர்வீட்டு கோலம்…


குனிந்து வாசல் பெருக்கி சுத்தம் செய்து,
கோலமிட்டது என்னவோ அவள் வீட்டு வாசலில்தான்

ஆனால் குப்பையானது என் மனது,

அவள் போட்ட பூக்கோலம் என்னவோ அழகுதான்,

ஆனால் போர்க்களமாகி அலங்கோலமானது என் மனது


முத்தங்களால் உன்னை...


கனவனும் மனைவியும் பணிபுரிந்தே ஆக வேண்டிய இந்த இயந்திர உலகில், வீட்டில் வீட்டு வேலைகளில் மனைவிக்கு துணை புறியாத கனவனின் கிறுக்கல்…

தூக்கம் தளும்பும் உன்னை
முழுதாய் உறங்கவிடுவதில்லை நான்
இச்சைமொழி பேசிப்புணர்ந்து ஆழ்ந்துறங்கி
தானாய் விழித்தெழும் என்முன்
'அலாரம்' வைத்தெழுந்து அரைத்தூக்கத்தில் தயாரித்த
'காப்பி'யை நீட்டுகிறாய்
சிறுபொழுதினில் 'டிபன்' செய்து-பரபரப்பாய்
'லன்ச்'சும் கட்டிக்கொடுத்து விடுகிறாய்
உட்கார்ந்த இடத்திலேயே கையலம்ப நீரெனக்கு.
எல்லாம் முடித்து அவசர அவசரமாய்
அலுவலகம் கிளம்புகிறாய்
நகரநெரிசலில் பேருந்து உரசலில்
அலுவலக 'இரட்டை அர்த்த' வார்த்தைகளில்
உடலும் உள்ளமும் கசகசத்துத் திரும்புகிறாய்
மீண்டும் சமைத்து இரவுணவு முடித்து ஓய்ந்துறங்குகையில்
உன்னை முழுதாய் உறங்கவிடுவதில்லை நான்…
மறுவிடிகாலை அலாரம் வைத்தெழுந்து….
சிறுவுதவியும் செய்யாது
தப்பித்துக்கொள்கிறேன் நான்
முத்தங்களால் உன்னைக் குளிர்வித்து…

பி.கு: ஆனந்த விகடனின் ரொம்ப பழைய பிரசுரத்தில் இருந்து சுட்டது

No comments:

Post a Comment