Sunday 13 June, 2010

தேவதை ஸ்பரிசம்…

அழகியதோர் காலைப்பொழுது
ஏனோ அன்று சூரியனுக்கு வெட்கம் தொற்றிக்கொள்ள
கரு மேகங்களின் பின்புறமாக முகத்தை மறைத்துக்கொண்டது

கொஞ்சம் பொறுத்துக்கொள்! இதோ வந்து விடுகிறேன் - முத்தமிட
மண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பும் மழை - தென்றலிடம்

மண்வாசனையும், ரம்மியமான சூழலும் மனதைச்சூழ
பேருந்தில் ஜன்னலோர இருக்கையில்  பயணிக்கலானேன்

நட்பு வட்டாரங்களுக்கு காலை வணக்கக் குறுந்தகவல் - கைப்பேசியில் பறக்க
திடீரென முன்னிருக்கையில் ஒரு மின்னல்

எப்பொழுதும் நினைவுகளில் முதுகு மட்டும் காட்டும் தேவதை
இன்று என் முன்னிருக்கையில், தேவதைகளின் வழக்கமான வெள்ளை சுடிதாரில்

‘இன்றாவது அவள் முகம் பார்த்தே ஆக வேண்டும்’
மனது காற்றாடியாய் எங்கெங்கோ பறக்க,
என்னையே அறியாமல் இருக்கையின் விளிம்பில் நான்

கட்டிவைக்கப்படாத அவள் கூந்தல் தென்றலுடன் கைகோர்க்க
மெல்ல என் முகத்தில் அவை சீண்டத் துவங்கின

இந்த நொடியே என் உயிர் போகினும் மகிழ்ச்சியே!

‘இன்னும் 2 நிமிசம் இந்த ‘கப்ப’(gabbu) உள்ளே இழுத்தா நெஜமா உயிர் போயிடும்டா.
யோசிக்க நேரமில்ல, டக்குனு முழிச்சிடு.
முகத்தில் இருந்ததை விலக்கிவிட்டு விழித்தால்,
அருகே படுத்திருந்த அறைத்தோழன் எழுந்திருக்கும்போது
அவனது துவைக்காத போர்வையை என் முகத்தில் விசிறிவிட்டுப் போயிருக்கிறான்.

அடச்சே… அதெல்லாம் கனவா?

No comments:

Post a Comment