மொழி...
மூன்று வயதுவரை அன்புத்தாயிடம் கற்றறிந்தேன்
வீட்டில் பேசும் கன்னட மொழியை…
பள்ளியில் ஆசிரியரிடம் கற்றறிந்தேன்
மற்றவர்களிடம் பேசும் அழகிய தமிழ் மொழியை…
கல்லூரியில் நண்பர்கள் மற்றும் அண்ணண்களின் உதவியோடு கற்றறிந்தேன்
வெளியுலகில் பேச, வருமானம் ஈட்ட ஆங்கில மொழியை…
ஆனால்,
எவ்வளவோ முயன்றும்
எப்போது கேட்டாலும் ஆனந்தம் தரும்,
ஒன்றரை வயதே ஆன நீ பேசும் மழலை மொழியை மட்டும்
என்னால் கற்றுக்கொள்ள முடியாதது ஏன்?
அது, உங்களைப் போன்ற குட்டி தேவதைகளுக்கும், தேவ தூதர்களுக்கும் மட்டுமே சொந்தமான மொழியோ?
மாமாவுக்கு விடை சொல்வாயா, என் அக்கா பெற்றெடுத்த "முத்து" மாப்பிள்ளையே?
நவீனம்…
என்னைத் தாலாட்டி உறங்கவைக்க
என் அன்னையைப் பெற்ற தாயே இருந்தார்…
என் மாப்பிள்ளையைத் தாலாட்ட அவர்
இல்லாவிட்டாலும், அவரது பருத்திப்புடவை தொட்டிலாய்…
ஆனால் இனி,
என் பிள்ளைகளுக்கும், இனிவரும் சந்ததிக்கும்.!?!?
சுடிதாரில்தான் தொட்டில் கட்ட முடியுமா? - இல்லை
நைலான்தான் பருத்தியின் சுகம் தந்துவிடுமா?
என்ன நவீன உலகமோ போங்கள்?
No comments:
Post a Comment