Sunday 13 June, 2010

சாலையோர தேவதை...

நான் வேண்டாமென்றாலும் என் கண்கள் நிறுத்தியதேயில்லை,
எனக்கான தேவதையைத் தேடும் படலத்தை…

அன்றும் அப்படித்தான்-

எங்களது பேருந்து நிறுத்தத்தில் வெள்ளை சுடிதாரில் ஒரு தேவதையைக் காட்டியது
சாலையின் எதிர்புறம் அவள் - மறுபுறம் நான்

நினைவுகளில் மனம் எங்கெங்கோ பறக்க
பார்வை அம்புகள் மட்டும் அவள் மேலே…

எல்லா தேவதைகளுக்குமே ஒரு ஒற்றுமை,
தன்னைப் பார்க்கும் அழகான ஆண்களை (புரியுது)                                        - சுமாரான ஆண்களை (சரி விடுங்க)தன்னைப் பார்க்கும் ஆண்களை (இப்போ சந்தோசமா?) பொய்க்கோபத்துடன் முறைப்பதில்,

ஆனால் இந்த முறைப்புதான் முதல் கட்ட வெற்றி…

இப்படியே ஐந்து நிமிடம் கழிய, திடீரென வந்து நின்றது ஒரு ‘Pulsar’
முகத்தை துப்பட்டாவில் மறைத்துக்கொண்டு அந்த தேவதை
(இன்னும் என்ன தேவதை வேண்டிகெடக்கு?)
அந்த வெள்ளை சுடிதார் போட்ட பொண்ணு பின்சீட்டில் அமர்ந்தாள்.

வண்டி சீறிப்பாய்ந்தது E.C.R ல்…
அடடா… Vada gone…

‘ஏய்! குமார். பக்கத்துல நிக்கிற pink சுடிதார் எப்படி?’
-கண்கள் மீண்டும் தூண்டில் போட,

“எதுக்கு இன்னொரு ‘Apache’ல ஏறிப் போறதுக்கா?
ஒழுங்கா T51 வருதானு பாரு. office போலாம்” மனதிற்குள் நான்…


2 comments:

  1. //எதுக்கு இன்னொரு ‘Apache’ல ஏறிப் போறதுக்கா?//
    ஆசைய பாரு ?! ;)
    இந்த TEMPLATE LOAD ஆக ரொம்ப நேரம் ஆகுது :(
    BLOG SPEED உம் கொறஞ்சிடுது..

    ReplyDelete
  2. யோவ் தேசாந்திரி. உனக்காகதான் அந்த டெம்ப்ளேட் மாத்தினேன். இதுவும் பிடிக்கலையா? சரி விடு மாத்திடலாம்.

    ReplyDelete