“ஹாய் & ஹலோ. வெல்கம் டு வாழ்த்தலாம் வாங்க. நம்ம கூட பேச போற அடுத்த Caller” இது எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா? ஆமாங்க தொ(ல்)லைபேசில பேசி பேசி பாட்டு போடுவாங்களே, அதைப் பத்தின பதிவுதான் இது.
முன்னாடி ஒரு காலத்துல தூர்தர்ஷன்னு ஒரே சேனல்தான் இருக்கும். ரிமோட்களெல்லாம் நிம்மதியா இருந்த காலம் அது. அப்போலாம் எங்க ஊர்லயே மொத்தம் 2 வீட்டுலதான் டிவி இருக்கும். Sutter வெச்ச Solidair டிவி நியாபகம் இருக்கா அதுதான். அப்புறம் ஊருக்கே பொதுவா பஞ்சாயத்து டிவி இருக்கும். ஊர்லயே 2 வீட்லனு சொன்னேன்ல, அதுல ஒண்ணு எங்க அத்தையாங்க வீடு. எல்லாரும் உக்காந்து பார்க்குற மாதிரி ஒரு இடத்துல டிவி இருக்கும். நிறைய பேர் பார்ப்பாங்க. எங்க அத்தை வீடுங்கிறதால நான் chairல உக்காரலாம், Volume குறைக்கலாம் கூட்டலாம். என்னோட மத்த நண்பர்களெல்லாம் பொறாமையா பார்ப்பாங்க. அந்த வயசுல அதுல ஒரு தனி பந்தா.
நானும் எங்க அக்காவும் ஸ்கூல் ஹோம்வொர்க்லாம் 7.30P.M மணிக்குள்ள எழுதிட்டு, 8.00P.M க்குள்ள சாப்பிட்டுட்டு அத்தை வீட்டுக்கு ஓடிருவோம். ம்ம்ம் சொல்ல மறந்துட்டேன், எங்க அத்தைக்கு 4 பொண்ணுங்க . ரொம்ப பொறாமைப்படாதீங்க எல்லாரும் என்னை விட பெரியவங்க
. 7.55 க்கெல்லாம் அத்தை வீட்ல ஆஜர். அய்யாதான் டிவிய ஆன் பண்ணுவேன். 7.59க்கு செய்திகளுக்கு Count down ஸ்டார்ட் ஆனதுமே நானும் எங்க அக்காவும் ஒரு பந்தயம் கட்டுவோம் ‘இன்னைக்கு செய்தி வாசிக்கப்போற ரெண்டு பேருமே லேடீஸ்-னு நானும், இல்ல ரெண்டுமே Gentsனு எங்க அக்காவும். அப்படி ஒரு ஆண், ஒரு பெண்-னு பந்தயம் வெச்சா யார் மொதல்ல வணக்கம் சொல்வாங்கன்னும் சேர்த்து சொல்லணும்.
பந்தயத்துல யார் ஜெயிக்கிறாங்களோ அவங்களுக்கு இன்னொருத்தர் அடுத்த நாள் ஸ்கூல் போகும்போது ஜவ்வு மிட்டாய் வாங்கித்தரணும். அதுக்குதான் பந்தயமே. நிறைய தடவ நான்தான் ஜவ்வுமிட்டாய் வாங்குவேன். அக்கா வாங்குனாலும் பாதி தந்திருவா. (தரலைணா நானே புடுங்கிருவேன்னு தெரியும் அக்காவுக்கு). இது அத்தை வீட்ல.
வெள்ளிக்கிழமை ஆச்சுன்னா பஞ்சாயத்து டிவி பார்க்க போயிடுவேன். ஏன்னா 7.30க்கு ஒளியும் ஒலியும் போடுவாங்க. அதுல இன்னைக்கு ரஜினி பாட்டு போடுவாங்க, எம்.ஜி.ஆர் பாட்டு போடுவாங்கன்னு நண்பர்கள் கூட பந்தயம். இந்த பந்தயத்துல ஜெயிச்சா ஜவ்வு மிட்டாயில்ல, அடுத்த சனி ஞாயிறுல வாடகை சைக்கிள் எடுத்தா அதுல 2 ரவுண்டு ஓட்டத் தரணும். அதெல்லாம் ஒரு காலம். ப்ப்ச்ச்…
இப்போ எதுக்கு இந்த மொக்கைய போட்டேன்னா அப்போவெல்லாம் ஒளியும் ஒலியும்தான் பாட்டு போடுற ஒரே நிகழ்ச்சி. பழைய பாடல்களைக்கூட ஆட்டம் போட்டு ரசிச்சு பார்ப்போம். அப்புறம்தான் டிஷ் ஏண்டனா, கேபிள் டிவினு ஆக்கிரமிப்புகள் அதிகமாச்சு. கேபிள் டிவியெலாம் வந்த அப்புறம் எங்க வீட்லயே டிவி வாங்கிட்டாங்க. அப்போ எனக்கு பிடிச்ச நிகழ்ச்சி ‘பெப்ஸி உங்கள் சாய்ஸ்’. போன் பண்ணி உமா ஆண்ட்டிகிட்ட நமக்கு பிடிச்ச பாட்டு கேட்டா அவங்க அந்த பாட்டு போடுவாங்க.
அந்த நிகழ்ச்சி எங்க அம்மாவுக்கும் ரொம்ப பிடிக்கும். எல்லா பெண்களுக்கும் ரொம்ப பிடிக்கும். ஏன்னா பெப்ஸி உமா வித விதமா அழகழகா புடவை கட்டிகிட்டு வருவாங்க. ஆனா அது எப்பவோ எடுத்துட்டு கொஞ்ச நாள் கழிச்சுதான் டெலிகாஸ்ட் பண்ணுவாங்க.
அப்புறம்தான் லைவ் டெலிகாஸ்ட் கான்செப்ட் வந்திச்சு. அவ்ளோ நேரம் கஷ்டப்பட்டு கால் பண்ணிட்டு நாம பேசுறத நாமளே கேக்க முடியாது. அதுவாவது பரவாயில்ல நாம கேக்குற பாட்டாவது போடுறாங்களானா அதுவும் கிடையாது.
நான் காலேஜ் ஹாஸ்டல்ல படிக்கும் போது, (நம்ம எப்போ படிச்சோம்) இருக்கும் போது lunch முடிச்சிட்டு மறுபடி க்ளாஸ் போறதுக்கு 10- 15 நிமிசம் டைம் இருக்கும். அந்த கேப்ல 2 பாட்டு கேக்கலாம்னு எஃப்.எம் போடுவோம். ‘கோடைப்பண்பலையில் இது கொடைக்கானல்’. 3 நிமிசம் விளம்பரம் ஓடும், அப்புறம் இந்த பாடலை விரும்பி கேட்ட நேயர்கள்னு 5 நிமிசத்துக்கு ஒரு பெரிய லிஸ்ட் படிப்பாங்க. அப்புறம் பாட்டு போடும்போது கிளம்பி க்ளாஸ் போயிடுவோம்.
லைவ் டெலிகாஸ்ட் வந்தாலும் வந்துச்சு, கூடவே ஸ்பான்சர்ஸ் - விளம்பரங்களும் வந்திருச்சு. முன்னாடியெல்லாம் நிகழ்ச்சிக்கு நடுவுலதான் விளம்பரம் போடுவாங்க. இப்போ விளம்பரங்களுக்கு நடுவுலதான் நிகழ்ச்சியே. அதுவும் கால் பண்ணினா எவ்ளோ நேரம் வெயிட்டிங்க்ல இருக்கணும் தெரியுமா. ஆனா பேசுறது என்னமோ 2 நிமிசம்தான். அதுவும் நாம கேக்குற பாட்டு கூட போட மாட்டாங்க . இப்போ இருக்கிற நிகழ்ச்சியெல்லாம் பெண்களுக்கு பிடிக்கிறதில்ல. ஏன் தெரியுமா? பெப்ஸி உமா அழகழகா புடவை கட்டிட்டு வருவாங்க பிடிச்சது, ஆனா இப்போ வர்றவங்கதான் டிரஸ்ஸே போடுறதில்லயே? அட ஒழுங்காவே டிரஸ் போடறதில்லைனு சொல்ல வந்தேம்ப்பா. எப்பவும் தப்பு தப்பாவே நினைக்கிறது.
அதுவும் காலையில 8 -10 வாழ்த்துக்கள் சொல்ற நிகழ்ச்சியிருக்கே. ரொம்ப மோசம், ‘அடுத்த காலர் பார்க்கலாம்னு’ சொல்வாங்க, பெயர் கேட்டுட்டு யாருக்கு வாழ்த்துக்கள்னு கேப்பாங்க. அவங்க சொல்லிகிட்டு இருக்கும் போதே கால் கட் பண்ணிட்டு, ‘கட் ஆய்டுச்சுனு; ஈஈனு பல்ல காட்டிட்டு பாட்டு போட்ருவாங்க. பாட்டும் முழுசா போட மாட்டாங்க, 2 லைன் போட்டுட்டு விளம்பரம் போட்ருவாங்க. நாஞ்சென்ஸ்…
இப்படியே போச்சுன்னா கால் பண்றவங்க பெயர் மட்டும் கேட்டுகிட்டு ‘அவர் வாழ்த்தணும்னு நினைச்சவங்களுக்காக இந்த பாட்டு, இந்த பாட்டு போடணும்னு நினைச்சதுக்காக விளம்பர இடைவேளைனு’ கிளம்பிடுவாங்க. அதுவும் இல்லைனா Loud speaker போன்ல ரிங் அடிக்கிற சத்தம் மட்டும் கேட்க வெச்சிட்டு, ‘இதோ நமக்கு யாரோ ஒருத்தர் கால் பண்ண டிரை பண்றாரு, அவர் கால் பண்ணனும்னு நினைச்சதுக்காக பாடல் பார்ப்போம், பாடலுக்காக விளம்பரம் பார்ப்போம் கிளம்பினாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்ல
இப்போவும் பந்தயம் கட்டுவோம் ரூம்ல. ‘இன்னைக்கு VJ நல்ல ஃபிகர் வந்திருக்கும்னு. எங்க நடக்குது . தினமும் பந்தயத்துல தோல்விதான். மகாலக்ஷ்மி செல்லம் போனதுக்கப்புறம், திவ்யா அப்புறம் இப்போ நிஷா. ஏதோ இவங்களை நினைச்சு மனச தேத்திகிட்டு இருக்கேன். வேற என்ன பண்றது?
Saturday, 19 June 2010
மழையும் கொடூர யோசனைகளும்…
மழை வந்துச்சுன்னா மழையிலயிருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு ஏதோ என்னோட குட்டி களிமண்ணுல ச்சீ… மூளையில தோணின சில யோசனைகள்…
கொடூர யோசனை#1:
காலையில எந்திரிக்கும் போது மழை வந்துகிட்டு இருக்கு. ஆஃபீஸ் போலாமா வேணாமானு ஒரு பெரிய சந்தேகம். அது தினமும்தான் இருக்கும். இன்னைக்கு மழை வேற வருது. உடனே நீங்க உங்க TL, மேனேஜர், Team mates எல்லார்க்கும் கால் பண்ணி நான் இன்னைக்கு கண்டிப்பா ஆஃபீஸ் வருவேன்னு சொல்லிடுங்க. முடிஞ்சா வீட்டுக்கு வெளிய வந்து நின்னு சத்தம் போட்டு கூட சொல்லுங்க மழைக்கு கேக்குற மாதிரி. சொல்லிட்டு கபால்னு போய் இழுத்து போர்த்தி தூங்கிடுங்க.
நீங்க வெளிய வருவீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்து மழை ஏமாந்து போகும்ல?
************************************************************************************
கொடூர யோசனை#2:
ஐடியா 1னோட உல்ட்டா. கால் பண்ணி ‘இன்னைக்கு நான் ஆஃபீஸ் வர மாட்டேன்’னு சொல்லிட்டு திடீர்னு கிளம்பி ஆஃபீஸ் போய்டுங்க.
நீங்க இன்னைக்கு ஆஃபீஸ்க்கு லீவ்னு நினைச்சுகிட்டு இருந்த மழை ஏமாந்து போகும்ல?
************************************************************************************
கொடூர யோசனை#3:
மழை வந்ததும் போய் உங்க வீட்டு கதவு கிட்ட ஒளிஞ்சுக்கோங்க. அப்புறமா திடீர்னு வெளிய வந்து மழைய தொட்டு ‘ஐஸ், ஐஸ்’னு கத்துங்க. அப்போ மழையே மறுபடி ‘OUT’ ஆயிடும். அப்புறம் மறுபடி அது 1..2..3 count பண்ண போயிடும்ல?
************************************************************************************
கொடூர யோசனை#4:
மழையின் முக்கியமான நொக்கமே நம்மளை நனைக்கிறதுதான். அதனால நீங்க அஃபீஸ்க்கு கிளம்பி, நல்ல neatஆ அயர்ன் பண்ணி டிரஸ் போட்டுகிட்டு நேரா போய் ஷவர்ல நின்னோ இல்லையின்னா ஒரு பக்கெட் தண்ணிய எடுத்து ஊத்தியோ உங்களை ஃபுல்லா நனைச்சுக்கோங்க. துளி கூட நனையாம இருக்கக்கூடாது. ஓ.கே வா? அப்படியே கிளம்பினீங்கன்னா மொதல்லயே நனைஞ்ச உங்கள நனைக்க முடியாம மழை ஏமாந்து போகும்ல பாவம்? ஆனா நீங்க முழுசா நனையாம வெளிய வந்தீங்கன்னா மழைக்கு கொண்டாட்டம்தான்.
************************************************************************************
கடைசியா கொடூர யோசனை#5:
‘ஒழுங்கா போயிடு. இல்லையின்னா இந்த போஸ்ட்ட printout எடுத்து (மழையில) நனைச்சு உன்னை படிக்க வெச்சிருவேன்’னு மிரட்டுங்க. அப்புறம் பாருங்க……
இதைப்படிச்சதுமே உங்களுக்கு எனக்கு ஏதாவது குடுக்கணும் போல தோணும். உங்க அன்புக்கு நன்றி.மக்களே எதுவாயிருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். தீர்த்துட்டா அப்புறம் பேச முடியாது பாருங்க. ஹோக்கே???
இன்னும் இது மாதிரி பல பல யோசனைகள் இருக்கு. நீங்க ஓ.கே சொன்னா அடுத்தடுத்த பதிவுகள்ல வழங்கிடறேன். என்ன சொல்றீங்க? டீலா? நோ டீலா???

என் தேவதைக்கு…(cont)
ஊரெல்லாம் அடைமழை - அதன் விளைவால்
என் மனமெல்லாம் உன் நினைவு மழை
மழையில் நனைந்தபடி நடப்பது உனக்கு மிகவும் பிடிக்கும்
எனக்கும்தான் - உடன் கைகோர்த்து நடப்பது நீயென்றால்…
*************************************************************
இதோ இப்பொழுதும் மழையில் நனைந்தபடி நடக்கிறேன்
ஆனால்,”அவளின்றி நீ மட்டும் ஏன் தனியே?”
என் ஒவ்வொரு மழைத்துளியும் என்னைத்
தொடவில்லை - சுடுகிறது…
*************************************************************
எப்போதும் நடக்கையில் பொது இடமென்று
கை மட்டும் கோர்த்து நடப்பாய்
மழையில் நடப்பதென்றால் மட்டும் தோள் சாய்வாய்
அதற்காகத்தான் சரியாக 5 அடி 5 அங்குலமே வளர்ந்தாயோ?
உன் சிரம் என் தோள் சாயும் உயரத்திற்கு?
*************************************************************
“மழை வரும் போல இருக்கு. குடை எடுத்திட்டு வரேன்”னு
சொன்னேல - எங்கடா? என்றேன் நான்.
“இதோ இங்கே” என சிரித்தபடி போர்த்தினாய் துப்பட்டாவை
தூறல் ஆரம்பித்ததும் நடந்தோம் சிறிது தூரம்
“குளிருதுப்பா” என நெருங்கினாய் என்னருகே
அங்கே நம்மிடையே புகுந்து வெளியேற முயன்ற
காற்றும் தோற்றுத்தான் போனது! ‘குளிருக்கு நன்றி’
உறவுகளுக்கும் ரத்த பாசங்களுக்கும் தர விருப்பமில்லை
உனக்கு மட்டும், உனக்காக மட்டுமே தருவதே என் விருப்பம்
என்னிடமிருந்தால் பாசத்தில் தந்துவிடுவேன் - அதனால்
நீயே பத்திரமாக வைத்துக்கொள் எனது இதயத்தை
நான் வேண்டுமானால் மற்றவர்களிடம் பொய் சொல்லிக்கொள்கிறேன்
‘அதை துலைத்துவிட்டேன். துலைத்த இடம் மறந்துவிட்டேன்’ என
#############################################################
மறக்க முடியா நிகழ்வு எதுவென கேட்பவர்களுக்கு
எத்துணைதான் சொல்வது? உன்னுடனிருந்த ஒவ்வொன்று நொடியையும்?
வேண்டுமானால் கடைசியாக நடந்தது என இதைச் சொல்லிவிடவா?
சென்ற வாரம் உலகம் அழிவதைப் பற்றி சொல்லும் திரைப்படத்திற்கு
இரவுக்காட்சிக்கு ‘தேவி’ திரையரங்கம் போய் வந்ததை?
திரைப்படம் முடிந்து நள்ளிரவு 1 மணிக்கு
யாருமற்ற மவுண்ட் ரோட்டில் நீயும் நானும் மட்டும் பயணிக்க
இரவு பெய்துவிட்டு போன மழை குளிர் காற்றை மிச்சம் விட்டுப் போயிருக்க
வேகமாகப் போனால் உன்னுடனான பயணமும்
வேகமாய் முடிந்திடுமே என மிதவேகத்தில் பயணம் தொடர
எதுவும் வேண்டாமென சிகப்பு விளக்குமின்றி,
எது வேண்டுமானாலும் செய்யென பச்சை விளக்குமின்றி,
அழகாய் காதல் செய்யென மஞ்சள் விளக்குமட்டும்
அணைந்து அணைந்து எரிந்தபடி சிக்னல்களும் சிம்பாலிஸம் காட்ட
குளிரை விரட்டுவதாய் (குளிருக்கு நன்றி) மிக லாவகமாய்
நீ இறுக்கி அணைத்த போது உன் ஸ்பரிசமும் கதகதப்பும்
போதும் எனக்கு என் மீதான் உனது காதலை புரிந்து கொள்ள…
என் தேவதைக்கு…
ஆனாலும் நீ கொடுமைக்காரி…
சாப்பிட சரியாக 3 நிமிடமே தருகிறாய்,
அடுத்த நொடியில் அழைப்பு - “இன்னுமா சாப்பிடற?”
சற்று உனது பாசக்கொடுமையை தளர்த்து
உன்னுடன் நள்ளிரவு தாண்டியும் பேசுவதற்காகவாவது
சற்று அதிகமாக சாப்பிட்டுக்கொள்கிறேன்
###
இந்த விளையாட்டு எனக்குப் பிடிக்கவேயில்லை செல்லம்
நமது ஒவ்வொரு சந்திப்பிற்கும் வீட்டில்
எனது மாமனார் மாமியாரிடம் நீ பொய் சொல்வதும்,
உனது மாமானார் மாமியாரிடம் நான் பொய் சொல்வதும்.
என்றுதான் முடிவுறும் இந்த பொய் விளையாட்டு?
###
உன்னிடம் பிடிக்காதது-
எவ்வளவு முத்தக் கோரிக்கைகள் கேட்டாலும் நிராகரிப்பது
உன்னிடம் பிடித்தது-
நீ மட்டும் கோரிக்கையோ அறிவிப்போயின்றி எனக்கு தருவது
அதென்ன வாங்குவதை விட தருவதில் உனக்கு அப்படியொரு இன்பம்?
###
நமது கடைசி சந்திப்பில்
புறப்படும்போது கேட்டாய், “உன்னை கிள்ளிக்கட்டுமா என்று?”
வேண்டாம் வலிக்கும், எனக்கல்ல உன் செல்லத்திற்கு என்றேன்
மிகவும் வற்புறுத்தினாய்
நானும் “சரி ஒரே முறை மட்டும்” என சம்மதித்தேன்
உதட்டால் உதடு கிள்ளுவாய் என அறியாமல்
என் அறிவை என்ன சொல்ல என் கள்ளி?

Sunday, 13 June 2010
இரண்டு கவிதைகள் - 3...
தேவதை விளையாட்டு...
நேற்று நீ கேட்டதற்காக திடீர் சந்திப்பு
என்னைப் பார்த்ததில் உனக்கு அவ்வளவு மகிழ்ச்சி
ஐஸ்கிரீம் பார்த்த சிறுபிள்ளை போல…
என்னைப் பார்த்ததில் உனக்கு அவ்வளவு மகிழ்ச்சி
ஐஸ்கிரீம் பார்த்த சிறுபிள்ளை போல…
போன சனிக்கிழமை முழுக்க உன்னுடன் ஊர் சுற்றியது
எதுவுமே நடக்காதது போல, வெகுநாட்கள் கழித்து பார்த்தது போல
இது என்ன புதிதா? ஒவ்வொரு முறையும் நீ இப்படித்தான்
எதுவுமே நடக்காதது போல, வெகுநாட்கள் கழித்து பார்த்தது போல
இது என்ன புதிதா? ஒவ்வொரு முறையும் நீ இப்படித்தான்
கைகோர்த்து நடந்தோம். 5 நிமிட நடையில் சேரும் இடம் அது
ஆனால் 30 நிமிடங்களாக்கினாய் நடையை…
அந்த வித்தை உனக்கு மட்டுமே தெரிந்த ஒன்று
ஆனால் 30 நிமிடங்களாக்கினாய் நடையை…
அந்த வித்தை உனக்கு மட்டுமே தெரிந்த ஒன்று
தெருவில் மற்றவர்கள் கண்ணிலோ பொறாமைப்பெருக்கு…
வழக்கமான நமது மரத்தடியில், நான் அமர்ந்தேன்
என் தோள் சாய்ந்தபடி நீயும் அமர்ந்தாய்
என் தோள் சாய்ந்தபடி நீயும் அமர்ந்தாய்
சிறிது நேர மவுனம், பிறகு வெகு நேரம் பேச்சு
அனைத்தையும் ரசித்தபடி உன்னுடன் பேசிக்கொண்டிருந்தேன்
பிறகு பிரிய மனமின்றி இருவரும் அவரவர் உறைவிடம் சேர்ந்தோம்
அனைத்தையும் ரசித்தபடி உன்னுடன் பேசிக்கொண்டிருந்தேன்
பிறகு பிரிய மனமின்றி இருவரும் அவரவர் உறைவிடம் சேர்ந்தோம்
இன்று காலையில்,
“இவனுக்கு முத்திருச்சுடா. ராத்திரி முழுக்க என்னை
பிராண்டிட்டே இருந்தான். தனியா ஏதோதோ பேசினான்டா.
சீக்கிரமே கீழ்ப்பாக்கம் கூட்டிட்டு போகணும்” - அறைத்தோழன் கூற்று
“இவனுக்கு முத்திருச்சுடா. ராத்திரி முழுக்க என்னை
பிராண்டிட்டே இருந்தான். தனியா ஏதோதோ பேசினான்டா.
சீக்கிரமே கீழ்ப்பாக்கம் கூட்டிட்டு போகணும்” - அறைத்தோழன் கூற்று
பாவம் அவனுக்கெப்படி தெரியும் தேவதையே? நேற்று நீ என்னுடன் விளையாடியது?
உன் நினைவுகளின் விளையாட்டால் எனக்கு புதிய பெயர் “பைத்தியக்காரன்”
உன் நினைவுகளின் விளையாட்டால் எனக்கு புதிய பெயர் “பைத்தியக்காரன்”
என்னவள்...
உனக்காக எழுதி எழுதித் தீர்ந்துவிட்டதடி
எனது குறிப்பேட்டின் பக்கங்களும் பேனா மையும்,
எனது குறிப்பேட்டின் பக்கங்களும் பேனா மையும்,
ஆனால் உன் கண்கள் என்னுள் உண்டாக்கிய தாக்கத்தால்
நான் கிறுக்கிய வரிகளே இன்னும் முடியவில்லையடி
நான் கிறுக்கிய வரிகளே இன்னும் முடியவில்லையடி
உன்னை முழுக்க கவிதைகளால் கிறுக்கித்தள்ளினால்???
நிச்சயமாய் போதாது, குறிப்பேட்டின் பக்கமோ, பேனா மையோ மட்டுமல்ல
எனது ஆயுளும்தான்,
உனது கண்கள் கவிதையாகவே எனது ஆயுளில் மூன்றில் ஒன்று தீர்ந்துவிட்டதடி
உன்னை முழுவதுமாக கவிதையாக்க எனக்கும் ஆசைதான்
உன்னை முழுவதுமாக கவிதையாக்க எனக்கும் ஆசைதான்
பொறாமை பிடித்த கடவுள் சதி செய்கிறாரே? நான் என்ன செய்ய?
அப்படி நிகழுமெனில் அந்த பொறாமைக் காரனிடம் நிச்சயம் மன்றாடுவேன்
“நீ பூமிக்கு அனுப்பி வைத்த தேவதைக்கு
கடிதம் ஒன்று அனுப்ப வேண்டும்.
மேலோகத்தில் ஒரு தபால் நிலையம் உருவாக்கு” என்று
“நீ பூமிக்கு அனுப்பி வைத்த தேவதைக்கு
கடிதம் ஒன்று அனுப்ப வேண்டும்.
மேலோகத்தில் ஒரு தபால் நிலையம் உருவாக்கு” என்று
சாலையோர தேவதை...
நான் வேண்டாமென்றாலும் என் கண்கள் நிறுத்தியதேயில்லை,
எனக்கான தேவதையைத் தேடும் படலத்தை…
எனக்கான தேவதையைத் தேடும் படலத்தை…
அன்றும் அப்படித்தான்-
எங்களது பேருந்து நிறுத்தத்தில் வெள்ளை சுடிதாரில் ஒரு தேவதையைக் காட்டியது
சாலையின் எதிர்புறம் அவள் - மறுபுறம் நான்
நினைவுகளில் மனம் எங்கெங்கோ பறக்க
பார்வை அம்புகள் மட்டும் அவள் மேலே…
எல்லா தேவதைகளுக்குமே ஒரு ஒற்றுமை,
தன்னைப் பார்க்கும் அழகான ஆண்களை (புரியுது) - சுமாரான ஆண்களை (சரி விடுங்க)தன்னைப் பார்க்கும் ஆண்களை (இப்போ சந்தோசமா?) பொய்க்கோபத்துடன் முறைப்பதில்,
தன்னைப் பார்க்கும் அழகான ஆண்களை (புரியுது) - சுமாரான ஆண்களை (சரி விடுங்க)தன்னைப் பார்க்கும் ஆண்களை (இப்போ சந்தோசமா?) பொய்க்கோபத்துடன் முறைப்பதில்,
ஆனால் இந்த முறைப்புதான் முதல் கட்ட வெற்றி…
இப்படியே ஐந்து நிமிடம் கழிய, திடீரென வந்து நின்றது ஒரு ‘Pulsar’
முகத்தை துப்பட்டாவில் மறைத்துக்கொண்டு அந்த தேவதை
(இன்னும் என்ன தேவதை வேண்டிகெடக்கு?)
அந்த வெள்ளை சுடிதார் போட்ட பொண்ணு பின்சீட்டில் அமர்ந்தாள்.
முகத்தை துப்பட்டாவில் மறைத்துக்கொண்டு அந்த தேவதை
(இன்னும் என்ன தேவதை வேண்டிகெடக்கு?)
அந்த வெள்ளை சுடிதார் போட்ட பொண்ணு பின்சீட்டில் அமர்ந்தாள்.
வண்டி சீறிப்பாய்ந்தது E.C.R ல்…
அடடா… Vada gone…
அடடா… Vada gone…
‘ஏய்! குமார். பக்கத்துல நிக்கிற pink சுடிதார் எப்படி?’
-கண்கள் மீண்டும் தூண்டில் போட,
-கண்கள் மீண்டும் தூண்டில் போட,
“எதுக்கு இன்னொரு ‘Apache’ல ஏறிப் போறதுக்கா?
ஒழுங்கா T51 வருதானு பாரு. office போலாம்” மனதிற்குள் நான்…
ஒழுங்கா T51 வருதானு பாரு. office போலாம்” மனதிற்குள் நான்…
மனதின் தழும்புகள்...
மனதில் காயங்கள் -
சில உறவுகளால், சில வரவுகளால்,
சில உறவுகளால், சில வரவுகளால்,
காயங்கள் மறைந்தாலும், தழும்புகள் மனதிலே,
தழும்புகளை அவ்வப்போது விளையாட்டாய் சீண்டும் நினைவுகள்
சீண்டலில் வலியாகும் தழும்புகள்,
சீண்டலில் வலியாகும் தழும்புகள்,
நினைவுகளின் சீண்டலில், தழும்புகளின் வலியில்
ரணமாகும் இந்த பாழாய்ப் போன மனது…
ரணமாகும் இந்த பாழாய்ப் போன மனது…
தேவதை ஸ்பரிசம்…
அழகியதோர் காலைப்பொழுது
ஏனோ அன்று சூரியனுக்கு வெட்கம் தொற்றிக்கொள்ள
கரு மேகங்களின் பின்புறமாக முகத்தை மறைத்துக்கொண்டது
ஏனோ அன்று சூரியனுக்கு வெட்கம் தொற்றிக்கொள்ள
கரு மேகங்களின் பின்புறமாக முகத்தை மறைத்துக்கொண்டது
கொஞ்சம் பொறுத்துக்கொள்! இதோ வந்து விடுகிறேன் - முத்தமிட
மண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பும் மழை - தென்றலிடம்
மண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பும் மழை - தென்றலிடம்
மண்வாசனையும், ரம்மியமான சூழலும் மனதைச்சூழ
பேருந்தில் ஜன்னலோர இருக்கையில் பயணிக்கலானேன்
பேருந்தில் ஜன்னலோர இருக்கையில் பயணிக்கலானேன்
நட்பு வட்டாரங்களுக்கு காலை வணக்கக் குறுந்தகவல் - கைப்பேசியில் பறக்க
திடீரென முன்னிருக்கையில் ஒரு மின்னல்
திடீரென முன்னிருக்கையில் ஒரு மின்னல்
எப்பொழுதும் நினைவுகளில் முதுகு மட்டும் காட்டும் தேவதை
இன்று என் முன்னிருக்கையில், தேவதைகளின் வழக்கமான வெள்ளை சுடிதாரில்
இன்று என் முன்னிருக்கையில், தேவதைகளின் வழக்கமான வெள்ளை சுடிதாரில்
‘இன்றாவது அவள் முகம் பார்த்தே ஆக வேண்டும்’
மனது காற்றாடியாய் எங்கெங்கோ பறக்க,
என்னையே அறியாமல் இருக்கையின் விளிம்பில் நான்
மனது காற்றாடியாய் எங்கெங்கோ பறக்க,
என்னையே அறியாமல் இருக்கையின் விளிம்பில் நான்
கட்டிவைக்கப்படாத அவள் கூந்தல் தென்றலுடன் கைகோர்க்க
மெல்ல என் முகத்தில் அவை சீண்டத் துவங்கின
மெல்ல என் முகத்தில் அவை சீண்டத் துவங்கின
இந்த நொடியே என் உயிர் போகினும் மகிழ்ச்சியே!
‘இன்னும் 2 நிமிசம் இந்த ‘கப்ப’(gabbu) உள்ளே இழுத்தா நெஜமா உயிர் போயிடும்டா.
யோசிக்க நேரமில்ல, டக்குனு முழிச்சிடு.
முகத்தில் இருந்ததை விலக்கிவிட்டு விழித்தால்,
அருகே படுத்திருந்த அறைத்தோழன் எழுந்திருக்கும்போது
அவனது துவைக்காத போர்வையை என் முகத்தில் விசிறிவிட்டுப் போயிருக்கிறான்.
யோசிக்க நேரமில்ல, டக்குனு முழிச்சிடு.
முகத்தில் இருந்ததை விலக்கிவிட்டு விழித்தால்,
அருகே படுத்திருந்த அறைத்தோழன் எழுந்திருக்கும்போது
அவனது துவைக்காத போர்வையை என் முகத்தில் விசிறிவிட்டுப் போயிருக்கிறான்.
அடச்சே… அதெல்லாம் கனவா?
இரண்டு கவிதைகள் - 2...
மாடி வீட்டு மூன்றாம் பிறை…
அவளுக்கும் என்னைப் போல பயம்
மாடி வீட்டு மூன்றாம் பிறை…
எங்கே என்னுடன் பேசினால் காதல் வந்துவிடுமோ என்று!
அதனால்தான் பொய்க்கோபத்துடன் முறைக்கின்றாள்
என்னைக் காணும் போதெல்லாம்…
எங்கிருக்கிறாய் என் தேவதையே?
என் நினைவுகள் முழுக்க நீதான் தேவதையே
புறமுதுகு காட்டி சிரித்தபடி விளையாடுகிறாய்…
புறமுதுகு காட்டி சிரித்தபடி விளையாடுகிறாய்…
உன் நினைவுகளில் நான் கிறுக்கும் கிறுக்கல்கள்கூட
கவிதைகள் ஆகின்றன…
கவிதைகள் ஆகின்றன…
அந்த கிறுக்கல்களை கிறுக்கும் இந்த கிறுக்கன்கூட
கவிஞன் ஆகிவிட்டேன்…
கவிஞன் ஆகிவிட்டேன்…
நினைவுகளில் என் காதலியாய்,
எங்கோ யாருக்கோ(என் மாமனார் மாமியார்) மகளாய்…
எங்கோ யாருக்கோ(என் மாமனார் மாமியார்) மகளாய்…
நினைவுகளில் முகம் காட்ட மறுக்கும் தேவதையே,
உன் முகவரி தராவிட்டாலும் பரவாயில்லை
நீ இருக்கும் திசை மட்டும் காட்டு-
உன் முகவரி தராவிட்டாலும் பரவாயில்லை
நீ இருக்கும் திசை மட்டும் காட்டு-
அது போதும் எனக்கு அடுத்த கிறுக்கல்களைக் கிறுக்க...
புது வரவு...
கடவுள் மிகவும் நல்லவர்…
புதிதாக நாங்கள் மாறியிருக்கும் அறைக்கு அருகில்
மூன்று புதிய தோழிகள் அறிமுகமாகியிருக்கிறார்கள்.
மூன்று புதிய தோழிகள் அறிமுகமாகியிருக்கிறார்கள்.
கடவுள் மிகவும் நல்லவர்…
அழகான பெண்கள் நான் இருக்கும் திசைப்பக்கம் கூட வரமாட்டார்கள்
(எனக்கு மட்டும் அல்ல என் கல்லூரி ஆடவர்க்கே ராசி அப்படி - காலம் காலமாக)
இந்த முறை (ஆச்சர்யமாக) சற்றே ராசியின் விதி தளர்ந்திருக்கிறது
(எனக்கு மட்டும் அல்ல என் கல்லூரி ஆடவர்க்கே ராசி அப்படி - காலம் காலமாக)
இந்த முறை (ஆச்சர்யமாக) சற்றே ராசியின் விதி தளர்ந்திருக்கிறது
ஸ்ருதி, சௌம்யா, ராகினி - என மூன்று தேவதைகள்
3 பேருமே நன்கு படித்த, பட்டறிவு பெற்றவர்கள்.
ஸ்ரு & ரா - இரண்டாம் வகுப்பையும், சௌ - மூன்றையும் வெற்றிகரமாக கடந்திருக்கிறர்கள்
(Highly educated you know!!!)
3 பேருமே நன்கு படித்த, பட்டறிவு பெற்றவர்கள்.
ஸ்ரு & ரா - இரண்டாம் வகுப்பையும், சௌ - மூன்றையும் வெற்றிகரமாக கடந்திருக்கிறர்கள்
(Highly educated you know!!!)
கீ-கோ, ரிங்கா ரிங்கா ரோஸஸ், ஐஸ் பாய் போன்ற ஒலிம்பிக்குக்கே
சவால் விடும் வீர விளையாட்டுகள்தான் மாலை வேளையில்
சவால் விடும் வீர விளையாட்டுகள்தான் மாலை வேளையில்
கோடை விடுமுறைக்கு எல்லோரும் ஊருக்கு போனதால்
ஒரு வாரமாக சற்றே விரக்திதான்
ஒரு வாரமாக சற்றே விரக்திதான்
பள்ளி துவங்கியதும் மீண்டும் துவங்கிவிடுவோம் எங்கள் ஒலிம்பிக்ஸை
தோள்(ழர்)கள்…
அன்று…
கஷ்ட__
வார்த்தை முழுதாக முடிவதற்குள் அதை தீர்க்கவும்,
தாங்கவும் ஓடோடி வந்தன தோள்கள்…
வார்த்தை முழுதாக முடிவதற்குள் அதை தீர்க்கவும்,
தாங்கவும் ஓடோடி வந்தன தோள்கள்…
சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள அவர்கள் அன்றி வெறேது?
இந்த தோள்(ழர்)கள் தான் வாழ்க்கை… உலகம்…
இன்று…
சொல்லி அழுது… சாய்ந்து இளைப்பாற…
கொண்டாடி மகிழ… பகிர்ந்து கொள்ள…
பல பல விஷயங்கள் இருக்கின்றன,
அன்று இருந்த தோள்கள், இன்று . . . ?!?!?!
கொண்டாடி மகிழ… பகிர்ந்து கொள்ள…
பல பல விஷயங்கள் இருக்கின்றன,
அன்று இருந்த தோள்கள், இன்று . . . ?!?!?!
இன்றும் அதே தோள்கள் அப்படியேதான் இருக்கின்றன,
ஆனால், அலுவலகத்தில் பணிச்சுமைகளை சுமந்தபடி,
ஆனால், அலுவலகத்தில் பணிச்சுமைகளை சுமந்தபடி,
அப்பாக்களின் தோள்கள் ஓய்வெடுக்க வேண்டிய தருணம் இதுவென்று
புரிந்துகொண்டு குடும்பச் சுமைகளை சுமந்தபடி…
புரிந்துகொண்டு குடும்பச் சுமைகளை சுமந்தபடி…
“என்னடா மாமு, Weekend movie போலாமா?”
“Next week ல ஒரு Jolly tour போடுவோமா?”
“Next week ல ஒரு Jolly tour போடுவோமா?”
“ஓ - போலாமே மச்சி” அது அன்று…
இன்று அந்த கேள்விகள் கேட்கக்கூட ஆள் இல்லை,
அப்படியே கேட்டாலும்,
“Project - UAT போகுது மாப்ள. Saturday, Sunday Office போகணும்டா” இதுதான் இன்று…
அப்படியே கேட்டாலும்,
“Project - UAT போகுது மாப்ள. Saturday, Sunday Office போகணும்டா” இதுதான் இன்று…
எனது தோள்களின் முழுவலிமை என்னவென்று இப்பொழுதுதான் புரிகிறது எனக்கு…
இதோ “Hi da” - OCS ல் நண்பன் அழைக்கிறான் ஏதோ விஷயம் பற்றி பேச,
“Catch u later da. My TL calling. BYE”
“Catch u later da. My TL calling. BYE”
- அனுப்பிவிட்டு கிளம்புகிறேன் பணிச்சுமையைத் தாங்க...
யாருக்காக???
அன்பான மனைவி. அழகான மகன். இதை விட ஒரு மனிதனுக்கு வாழ்வில் வேறு என்ன வேண்டும்? மகன் பிறந்ததும் அப்பாக்களுக்கு சற்று பொறுப்பு கூடும் அல்லவா? அப்படித்தான் அவருக்கும் கூடியது. "என் மகன் வளர்ந்து பெரிய ஆள் ஆவது இந்த ஓட்டு வீட்டிலா? கூடாது! அவன் தவழ்ந்து, நடக்க ஆரம்பித்து, ஓடி விளையாடுவதற்குள் புதிதாக வீடு கட்ட வேண்டும்"
திருமணத்திற்கு வாங்கிய கடனே இப்பொழுதுதான் அடைத்தோம். வீடு எப்படி கட்டுவது? "வீடு கட்டணுமா? '******' வங்கிக்கு வாங்க! வீட்டு மனைக்கடன் வாங்கி, சந்தோஷமா வீட்டைக்கட்டுங்க" விளம்பரம் ஞாபகம் வர வங்கியை அனுகினார். அவர் பார்ப்பது ஆசிரியர் பணி, அரசாங்கப்
பள்ளியில். வங்கியில் கடன் தரவா மறுத்துவிடப் போகிறார்கள்?
பெரியவர்களிடம் கேட்டால் "இப்போ என்ன அவசரம்? 2 வருசம் போகட்டும். அதுக்குள்ள உன்ற சம்சாரத்துக்கும் seniority லTeacher வேலை கெடைச்சுடும். அப்போ லோன் வாங்கி கட்டிக்கலாம்" என அவர்களது அனுபவத்தில் கூறினார்கள்.
"2 வருசமா? அதுக்குள்ள பையன் வளர்ந்துருவானே. கூடாது. இப்பவே லோன் வாங்கனும். பையன் நடக்க ஆரம்பிக்கும் போது புது வீடு கட்டியாகணும். அவன் ஓடியாடி விளையாடுறது அந்த புது வீட்லயாதான் இருக்கணும்" தீர்க்கமான முடிவுடன், இருந்த பழைய வீட்டை இடித்து விட்டு அங்கு புதிய வீட்டு வேலைகளை ஆரம்பித்தார்.
எந்த வீடு நினைத்த பட்ஜெட்டில் கட்டி முடிந்து இருக்கிறது? நினைத்ததை விட 1-2 லகரங்கள் அதிகமாகவே செலவானது. பட்ஜெட்டுக்கு வங்கிக்கடன், அதிகமாக ஆன செலவுக்கு நட்பு வட்டாரங்கள் என ஒரு வழியாக வீட்டைக் கட்டி முடித்தார்.
தவழ்ந்து கொண்டிருந்த மகன், நடக்க ஆரம்பித்து விட்டான். அப்பா நினைத்ததை சாதித்து விட்டார். மகனும் புது வீட்டில் விளையாட ஆரம்பித்துவிட்டான். ஆனால், இப்பொழுதெல்லாம், வாங்கும் சம்பளத்தில் பெரும்பகுதி வங்கிக்கடனை அடைக்கவே சரியாக இருக்கிறது. மாதக்கடைசியில் வீட்டுச்செலவுகள் கையைக் கடிக்கிறதே? என்ன செய்யலாம்?
"மகன்தான் இப்பொழுது நடக்க ஆரம்பித்துவிட்டானே, நீ ஏன் தற்காலிகமாக ஏதாவது ஒரு தனியார் பள்ளிக்கு போகக்கூடாது?" மனைவியிடம் விண்ணப்பம். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு மனைவியும் அருகிலிருக்கும் தனியார் பள்ளிக்கு போக ஆரம்பித்துவிட்டாள்.
மகன் சந்தொஷமாக ஒடுகிறான், ஆடுகிறான், துள்ளி விளையாடுகிறான் - பாட்டியின் வீட்டில். நல்ல வேளை, இருவருக்கும் ஆசிரியர் பணி என்பதால் 'சனி, ஞாயிறு' இரண்டு நாட்கள் அன்பு மகனுடன் கழிக்க முடிகிறது அவனது பாட்டி வீட்டில்.
புது வீடு???(தலைப்பு…)
Saturday, 12 June 2010
அவளுடனான காதல்...
ஆண்டொன்று சுமந்தேன் நெஞ்சில் அவளை
என்னை அறவே பிடிக்கவில்லை என்று சொன்ன இவளை
விடு தொலையட்டும் என்றான் நண்பன்
வருவது வரட்டும் வா என்றான் இன்னொருவன்
அவள் வருந்தும்படி உன் வாழ்க்கையை வாழு என்றான் வேறொருவன்
வாழ்கிறேன் -
அவள் வருந்துவாள் என்றால் மாட்டேன்…
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தேவதை நீ காதல் செய்வதால்
இந்த காதலர் தினத்தை காதலரோடு,
காதலும் கொண்டாடுகிறது.
இரண்டு கவிதைகள் - 1...
மொழி...
மூன்று வயதுவரை அன்புத்தாயிடம் கற்றறிந்தேன்
வீட்டில் பேசும் கன்னட மொழியை…
பள்ளியில் ஆசிரியரிடம் கற்றறிந்தேன்
மற்றவர்களிடம் பேசும் அழகிய தமிழ் மொழியை…
கல்லூரியில் நண்பர்கள் மற்றும் அண்ணண்களின் உதவியோடு கற்றறிந்தேன்
வெளியுலகில் பேச, வருமானம் ஈட்ட ஆங்கில மொழியை…
ஆனால்,
எவ்வளவோ முயன்றும்
எப்போது கேட்டாலும் ஆனந்தம் தரும்,
ஒன்றரை வயதே ஆன நீ பேசும் மழலை மொழியை மட்டும்
என்னால் கற்றுக்கொள்ள முடியாதது ஏன்?
அது, உங்களைப் போன்ற குட்டி தேவதைகளுக்கும், தேவ தூதர்களுக்கும் மட்டுமே சொந்தமான மொழியோ?
மாமாவுக்கு விடை சொல்வாயா, என் அக்கா பெற்றெடுத்த "முத்து" மாப்பிள்ளையே?
நவீனம்…
என்னைத் தாலாட்டி உறங்கவைக்க
என் அன்னையைப் பெற்ற தாயே இருந்தார்…
என் மாப்பிள்ளையைத் தாலாட்ட அவர்
இல்லாவிட்டாலும், அவரது பருத்திப்புடவை தொட்டிலாய்…
ஆனால் இனி,
என் பிள்ளைகளுக்கும், இனிவரும் சந்ததிக்கும்.!?!?
சுடிதாரில்தான் தொட்டில் கட்ட முடியுமா? - இல்லை
நைலான்தான் பருத்தியின் சுகம் தந்துவிடுமா?
என்ன நவீன உலகமோ போங்கள்?
காக்க…காக்க…
சம்பவம் 1
இடம்:சோழங்கநல்லூர் சந்திப்பு.
அன்றும் அப்படிதான் அலுவலகம் போய்க்கொண்டிருந்தோம். சோழங்கநல்லூரில் புதிதாக சிக்னல் பொருத்தப்பட்ட நேரம்.
சிக்னலில் சிகப்பு. அதனால் அது Free left ஆ இல்லையா என்பதில் எனக்கு குழப்பம்.
அதற்குள் கேப்டன் தேவாரம்(கான்ஸ்டபில்) வந்துவிட்டார்.
ஓரங்கட்டினா அங்க வெள்ளையும் சொள்ளையுமா இன்னொருத்தர். (ஆபீசராமா!!!)*வண்டி யாருது? லைசென்ஸ் இருக்கா?
நானும் எல்லாம் கொடுத்தேன். வாங்கி வெச்சுகிட்டாரு.
"அதெல்லாம் தெரியாது. நான் இன்ஸ்பெக்டர்க்கு சொல்லிட்றேன். நீங்க அவர் கிட்ட பேசிக்கோங்க"
இந்த தடவ மொய் வெச்சது நான் இல்ல. என்னோட அரண்மனைத் தோழன்(Room mate).
கேப்டன் நண்பருக்கு டாடா சொல்லிவிட்டு ஆட்டோ பிடித்து சோகமாக அரண்மனை வந்து சேர்ந்தான் நண்பன்.
சட்டை கிழிஞ்சிருந்தா தெச்சு உடுத்திக்கலாம்…
இடம்:சோழங்கநல்லூர் சந்திப்பு.
நாள்: ஒரு திங்கட்கிழமை
அது நான் நாவலூர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த நேரம். அப்பொழுதெல்லாம் நானும் எனது மதுரைக்கார நண்பனும் அவனது 'splendor +'ல் தான் அலுவலகம் போவோம்.காலையில் நான் ஓட்டிப்போவேன், மாலையில் அவன் ஓட்டி வருவான்.(பெட்ரோல் அவனே போட்டுப்பான். பாசக்கார பய)
அன்றும் அப்படிதான் அலுவலகம் போய்க்கொண்டிருந்தோம். சோழங்கநல்லூரில் புதிதாக சிக்னல் பொருத்தப்பட்ட நேரம்.
ECR link road OMRல் இணையும் இடம். தினமும் அந்த வழியேதான் வருவோம். அன்றுதான் சிக்னல் workஆக ஆரம்பித்து இருந்தது.
சிக்னலில் சிகப்பு. அதனால் அது Free left ஆ இல்லையா என்பதில் எனக்கு குழப்பம்.
உடனே நான் பின்னாலிருந்த நண்பனிடம்" டே இது Free leftஆ இல்லயா?" எனக் கேட்டது அவன் காதில் விழுந்ததோ இல்லயோ. அங்கிருந்த கான்ஸ்டபில் காதில் நன்றாகவே விழுந்தது.(ஆஹா. சிக்கிட்டானுங்க அடிமைங்க)
நான் வண்டியை நிறுத்திதான் நண்பனிடம் கேட்டுக்கொண்டு இருந்தேன். அவன் " Free leftதான் டா. யேன் நிறுத்துற? விடு போலாம்" என்றான்.
அதற்குள் கேப்டன் தேவாரம்(கான்ஸ்டபில்) வந்துவிட்டார்.
"அதான் சிக்னல் போட்டு இருக்குள்ள. எங்க போற நீ?"
நண்பன்: "சார் இது Free left தானே?"
தேவாரம்: "என்ன நீ ரூல்ஸ் லாம் பேசுறே? வண்டிய ஓரங்கட்டு"(மாட்னோம்டா மாப்ள)
ஓரங்கட்டினா அங்க வெள்ளையும் சொள்ளையுமா இன்னொருத்தர். (ஆபீசராமா!!!)*வண்டி யாருது? லைசென்ஸ் இருக்கா?
*பேப்பர்ஸ் இருக்கா? னு எல்லார்கிட்டயும் கேக்குற அதே கேள்விய கேட்டார்.
நானும் எல்லாம் கொடுத்தேன். வாங்கி வெச்சுகிட்டாரு.
"500ரூபா ஃபைன் கட்டிட்டு வாங்கிட்டு போ" என்றார்.(நாட்டாமை… தீர்ப்ப மாத்து)
"சார் நாங்க போகல. Free leftஆ இல்லயானு நின்னு பேசிட்டு இருந்தோம். அவ்ளோதான்" என்றேன் நான்.
"அதெல்லாம் தெரியாது. நான் இன்ஸ்பெக்டர்க்கு சொல்லிட்றேன். நீங்க அவர் கிட்ட பேசிக்கோங்க"
என்று outgoingஏ போகாத Mobileல் பந்தாவாக நம்பர் டயல் செய்தார்.
அய்யய்யோ!! இருக்குற ரெண்டே இப்டி உயிர வாங்குதுங்க. இதுல பெரிய பூதம் வேற வரணுமா?
"சார் சார்! வேணாம் சார் ! வேணாம் சார்!" என பதுங்கினோம்.
"அப்டினா 100ரூபா கொடுத்துட்டு கெளம்புங்க" என மொய்க்கணக்கு எழுத சொன்னார்.(பக்கத்தில் இன்னொருவன் லைசென்ஸ் இல்லாமல் 200 ரூபாய் மொய் எழுதிக்கொண்டு இருந்தான்)
நாங்கள் யோசிப்பதற்குள், "நீங்க இன்ஸ்பெக்டர் கிட்டயே பேசிக்கோங்க பா" என மறுபடியும் "சென்னை-28 சிவா" ஸ்டைலில் மொபைலில் நம்பர் டயல் செய்தார்.
வேறு வழி இல்லாமல், 100 ரூபாயைய்க் கொடுத்தோம். (இன்னைக்கு யார் மூஞ்சில முழிச்சேன்?)
"சார் வெளியூர் பசங்க. சிக்னல் எப்டினு தெரியாமதான் இப்டி பன்னிட்டோம். பெட்ரோல் போட கூட காசு இல்ல சார்." என நண்பன் செண்டிமெண்டாக bittu போட.
ஆபீசரின் கல் மனதில் ஈரம் கசிந்து 50 ரூபாயை திருப்பி கொடுத்தார்.கடைசியாக கிளம்பும் போது "வெளியூர் பசங்க, எங்கயாவது மோதி அடி பட்டுட்டா? அப்புறம் உங்க அப்பா அம்மாக்கு யாருப்பா பதில் சொல்வா? அதுக்காகதான் நாங்க இப்டிலாம் உங்கள கண்ட்ரோல் பண்றோம்" என்றார். (புத்தி சொல்றாராமா!!!!)
அந்த இடத்தில்தான் தமிழக காவல்துறை தனது தனித்தன்மையைக் காட்டி நின்றது.
சம்பவம் 2
இடம்: சென்னை மத்திய புகைவண்டி நிலையம்(அட அதாங்க Chennai Central station)
போன சம்பவத்துலயாவது Two wheelerல போய் சிக்னல (மதிச்சும்)மதிக்காமதானே மொய் எழுதினோம். இந்த சம்பவத்துல கொடுமைய கேளுங்களேன்…
இந்த தடவ மொய் வெச்சது நான் இல்ல. என்னோட அரண்மனைத் தோழன்(Room mate).
அவனோட சொந்தக்காரங்க யாராவது சென்னை வந்தா கூட மொபைல்லயே பேசி வழியனுப்பி வைப்பான். அன்னைக்கு அவனோட Friend ஒருத்தவங்க ( எந்த Friend(boy/gal)னு நான் சொல்ல மாட்டேன் பா) சென்னை வழியா ஈரோடு போனாங்க.(அவங்க சொந்த ஊரு நம்ம நட்பு மாநிலம் ஆந்திரா, படிச்சது ஈரோட்டுல. காலேஜ் முடிச்சு டிகிரி பட்டம் வாங்க வந்தாங்க)சரி போறதே போறோம், அப்டியே கடைசியா இவனையும் பார்த்துட்டு போலாமேனு ஸ்டேசன் வர சொன்னாங்க.
Night 12.30 மணிக்குதான் train. அரண்மனைல இருந்து 10.30க்கு கெளம்பினான். திருவான்மியூர்ல இருந்து பஸ் பிடிச்சு 11.15கெல்லாம் central போயிட்டான். ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் இப்பவே எடுத்தா 1 மணி நேரம்தானே அதுக்கு Validityனு சொல்லி 12மணி வரைக்கும் சுத்திட்டு அப்புறமா எடுத்தான்.
Trainம் ஒரு 15நிமிசம்தான் லேட்டாதான் வந்துச்சு.
அவங்கள பார்த்து பேசிட்டு, (ஈரோடுக்கு நீயும் வா போலாம்னு அவங்க compel பண்ணது, இவன் "அங்க வந்தா அப்புறம் நீ திரும்ப ஊருக்கு போகும்பொது நான் ரொம்ப கஷ்டப்படுவேன். அந்த கஷ்டத்த கொஞ்சமா இப்பவே பட்டுக்கறேன்"னு வந்த கண்ணீரையும், 'நீ வெளியவே நில்லு'னு ஸ்டேசனுக்கு வெளியவே நிறுத்தி வெச்சுட்டு, உள்ள போனது, அத பத்திலாம் நான் சொல்ல மாட்டேன் பா.)
போகாதே… போகாதே… நீ பிரிந்தால் நான் இறப்பேன்..
எல்லாம் முடிஞ்சு அவங்கள (பிரிய முடியாம) வழியனுப்பி வெச்சுட்டு, ஸ்டேசன் விட்டு வெளிய வரும் போதுதான் சம்பவம் நடந்துச்சு.
அங்க இருந்த கேப்டன் பிரபாகரன் இவனை கூப்பிட்டு செக் பண்ணியிருக்காரு. இவனும் கம்பெனி Id card, Platform ticket எல்லாம் காமிச்சு இருக்கான். இருந்தாலும் என்ன ப்ரயோஜனம்?(Id card எடுக்கும் போது உள்ள purseல இருந்த மஹாத்மா காந்தி படம் போட்ட பேப்பர பார்த்துட்டாரு) அவர் மொய் வாங்க ப்ளான் போட்டுட்டாரு.
அதனால" உன்னை பார்த்தா சந்தேகமா இருக்கு. நாளைக்கு ஸ்டேசன்ல வந்து கையெழுத்து போட்டுட்டு Id card வாங்கிக்கோனு" எடுத்து வெச்சுகிட்டார். (அவன் மீசை வெச்சாலாவது பெரிய பையன் மாதிரி இருப்பான். "நீ மீசை வைக்கலேனா அழகா இருக்கேனு", யாரோ சொல்லிட்டாங்கன்னு, மீசை வைக்காம இஸ்கூலு பையன் மாதிரி இருப்பான்.
அவன் தீவிரவாதியோனு கேப்டனுக்கு சந்தேகம்.என்ன கொடுமை சார் இது?)
மீசை வைக்கலனாலும் அவன் ஒரு small Terror. இருந்தாலும் அவர் ஒரு அரசாங்க அதிகாரி அப்பிடிங்கிற மரியாதைக்காக அமைதியா நின்னான். இவன் கூட இன்னொருத்தரையும் மொய் வாங்க பிடிச்சு வெச்சிருந்தாரு கேப்டன். எவ்வளவோ மறைமுகமா சொல்லி பார்த்தாரு கேப்டன். இவங்க மொய் வைக்கிற மாதிரி இல்ல. அதனால கடைசில அவரே," சரி இருக்குறத கொடுத்துட்டு கெளம்புங்க"னு சொல்லிட்டாரு.
அரண்மனைத் தோழன் 200ரூபா வெச்சு இருந்தான். பக்கத்துல இருந்தவர் கிட்ட சின்ன நோட்டெல்லாம் இல்ல. ஒத்தையா ஒரே 500ரூபா தான் இருந்துச்சு. அரண்மனைத் தோழன் "சார் இந்த நேரத்துக்கு மேல பஸ் கூட இருக்காது. ஆட்டோல போக கூட காசு இல்ல"னு சொல்லி இருக்கான். அவரு தமிழ்நாடு போலீஸ் ஆச்சே. பொதுமக்களின் நண்பன். அதனால அரண்மனைத் தோழனுக்கு ஆட்டோவுக்காக 50ரூபா கொடுத்து, வழியனுப்பி வெச்சாரு.(இவர் அல்வா… ச்சி… அல்லவா நண்பர்)
கேப்டன் நண்பருக்கு டாடா சொல்லிவிட்டு ஆட்டோ பிடித்து சோகமாக அரண்மனை வந்து சேர்ந்தான் நண்பன்.
(சோகத்துக்கு காரணம் கேப்டன் இல்லீங்க. ஈரோடு போய்கிட்டு இருக்கிறவங்கதான் காரணம்)
சட்டை கிழிஞ்சிருந்தா தெச்சு உடுத்திக்கலாம்…
நெஞ்சு கிழிஞ்சிருக்கு, எங்க முறையிடலாம்?..
இரண்டு கவிதைகள்...
எதிர்வீட்டு கோலம்…
குனிந்து வாசல் பெருக்கி சுத்தம் செய்து,
கோலமிட்டது என்னவோ அவள் வீட்டு வாசலில்தான்
ஆனால் குப்பையானது என் மனது,
அவள் போட்ட பூக்கோலம் என்னவோ அழகுதான்,
ஆனால் போர்க்களமாகி அலங்கோலமானது என் மனது
முத்தங்களால் உன்னை...
கனவனும் மனைவியும் பணிபுரிந்தே ஆக வேண்டிய இந்த இயந்திர உலகில், வீட்டில் வீட்டு வேலைகளில் மனைவிக்கு துணை புறியாத கனவனின் கிறுக்கல்…
தூக்கம் தளும்பும் உன்னை
முழுதாய் உறங்கவிடுவதில்லை நான்
இச்சைமொழி பேசிப்புணர்ந்து ஆழ்ந்துறங்கி
தானாய் விழித்தெழும் என்முன்
'அலாரம்' வைத்தெழுந்து அரைத்தூக்கத்தில் தயாரித்த
'காப்பி'யை நீட்டுகிறாய்
சிறுபொழுதினில் 'டிபன்' செய்து-பரபரப்பாய்
'லன்ச்'சும் கட்டிக்கொடுத்து விடுகிறாய்
உட்கார்ந்த இடத்திலேயே கையலம்ப நீரெனக்கு.
எல்லாம் முடித்து அவசர அவசரமாய்
அலுவலகம் கிளம்புகிறாய்
நகரநெரிசலில் பேருந்து உரசலில்
அலுவலக 'இரட்டை அர்த்த' வார்த்தைகளில்
உடலும் உள்ளமும் கசகசத்துத் திரும்புகிறாய்
மீண்டும் சமைத்து இரவுணவு முடித்து ஓய்ந்துறங்குகையில்
உன்னை முழுதாய் உறங்கவிடுவதில்லை நான்…
மறுவிடிகாலை அலாரம் வைத்தெழுந்து….
சிறுவுதவியும் செய்யாது
தப்பித்துக்கொள்கிறேன் நான்
முத்தங்களால் உன்னைக் குளிர்வித்து…
பி.கு: ஆனந்த விகடனின் ரொம்ப பழைய பிரசுரத்தில் இருந்து சுட்டது
Subscribe to:
Posts (Atom)