Sunday, 13 June 2010

புது வரவு...

கடவுள் மிகவும் நல்லவர்…

புதிதாக நாங்கள் மாறியிருக்கும் அறைக்கு அருகில்
மூன்று புதிய தோழிகள் அறிமுகமாகியிருக்கிறார்கள்.

கடவுள் மிகவும் நல்லவர்…

அழகான பெண்கள் நான் இருக்கும் திசைப்பக்கம் கூட வரமாட்டார்கள்
(எனக்கு மட்டும் அல்ல என் கல்லூரி ஆடவர்க்கே ராசி அப்படி - காலம் காலமாக)
இந்த முறை (ஆச்சர்யமாக) சற்றே ராசியின் விதி தளர்ந்திருக்கிறது

ஸ்ருதி, சௌம்யா, ராகினி - என மூன்று தேவதைகள்
3 பேருமே நன்கு படித்த, பட்டறிவு பெற்றவர்கள்.
ஸ்ரு & ரா - இரண்டாம் வகுப்பையும், சௌ - மூன்றையும் வெற்றிகரமாக கடந்திருக்கிறர்கள்
(Highly educated you know!!!)

கீ-கோ, ரிங்கா ரிங்கா ரோஸஸ், ஐஸ் பாய் போன்ற ஒலிம்பிக்குக்கே
சவால் விடும் வீர விளையாட்டுகள்தான் மாலை வேளையில்

கோடை விடுமுறைக்கு எல்லோரும் ஊருக்கு போனதால்
ஒரு வாரமாக சற்றே விரக்திதான்
பள்ளி துவங்கியதும் மீண்டும் துவங்கிவிடுவோம் எங்கள் ஒலிம்பிக்ஸை

தோள்(ழர்)கள்…

அன்று…

கஷ்ட__
வார்த்தை முழுதாக முடிவதற்குள் அதை தீர்க்கவும்,
தாங்கவும் ஓடோடி வந்தன தோள்கள்…

சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள அவர்கள் அன்றி வெறேது?

இந்த தோள்(ழர்)கள் தான் வாழ்க்கை… உலகம்…

இன்று…

சொல்லி அழுது… சாய்ந்து இளைப்பாற…
கொண்டாடி மகிழ… பகிர்ந்து கொள்ள…
பல பல விஷயங்கள் இருக்கின்றன,
அன்று இருந்த தோள்கள், இன்று . . . ?!?!?!

இன்றும் அதே தோள்கள் அப்படியேதான் இருக்கின்றன,
ஆனால், அலுவலகத்தில் பணிச்சுமைகளை சுமந்தபடி,

அப்பாக்களின் தோள்கள் ஓய்வெடுக்க வேண்டிய தருணம் இதுவென்று
புரிந்துகொண்டு குடும்பச் சுமைகளை சுமந்தபடி…

“என்னடா மாமு, Weekend movie போலாமா?”
“Next week ல ஒரு Jolly tour போடுவோமா?”
“ஓ - போலாமே மச்சி” அது அன்று…

இன்று அந்த கேள்விகள் கேட்கக்கூட ஆள் இல்லை,
அப்படியே கேட்டாலும்,
“Project - UAT போகுது மாப்ள. Saturday, Sunday Office போகணும்டா” இதுதான் இன்று…

எனது தோள்களின் முழுவலிமை என்னவென்று இப்பொழுதுதான் புரிகிறது எனக்கு…

இதோ “Hi da” - OCS ல் நண்பன் அழைக்கிறான் ஏதோ விஷயம் பற்றி பேச,
“Catch u later da. My TL calling. BYE”
- அனுப்பிவிட்டு கிளம்புகிறேன் பணிச்சுமையைத் தாங்க...

யாருக்காக???

அன்பான மனைவி. அழகான மகன். இதை விட ஒரு மனிதனுக்கு வாழ்வில் வேறு என்ன வேண்டும்? மகன் பிறந்ததும் அப்பாக்களுக்கு சற்று பொறுப்பு கூடும் அல்லவா? அப்படித்தான் அவருக்கும் கூடியது. "என் மகன் வளர்ந்து பெரிய ஆள் ஆவது இந்த ஓட்டு வீட்டிலா? கூடாது! அவன் தவழ்ந்து, நடக்க ஆரம்பித்து, ஓடி விளையாடுவதற்குள் புதிதாக வீடு கட்ட வேண்டும்"
திருமணத்திற்கு வாங்கிய கடனே இப்பொழுதுதான் அடைத்தோம். வீடு எப்படி கட்டுவது? "வீடு கட்டணுமா? '******' வங்கிக்கு வாங்க! வீட்டு மனைக்கடன் வாங்கி, சந்தோஷமா வீட்டைக்கட்டுங்க" விளம்பரம் ஞாபகம் வர வங்கியை அனுகினார். அவர் பார்ப்பது ஆசிரியர் பணி, அரசாங்கப் 
பள்ளியில். வங்கியில் கடன் தரவா மறுத்துவிடப் போகிறார்கள்?

பெரியவர்களிடம் கேட்டால் "இப்போ என்ன அவசரம்? 2 வருசம் போகட்டும். அதுக்குள்ள உன்ற சம்சாரத்துக்கும் seniority லTeacher வேலை கெடைச்சுடும். அப்போ லோன் வாங்கி கட்டிக்கலாம்" என அவர்களது அனுபவத்தில் கூறினார்கள். 

"2 வருசமா? அதுக்குள்ள பையன் வளர்ந்துருவானே. கூடாது. இப்பவே லோன் வாங்கனும். பையன் நடக்க ஆரம்பிக்கும் போது புது வீடு கட்டியாகணும். அவன் ஓடியாடி விளையாடுறது அந்த புது வீட்லயாதான் இருக்கணும்" தீர்க்கமான முடிவுடன், இருந்த பழைய வீட்டை இடித்து விட்டு அங்கு புதிய வீட்டு வேலைகளை ஆரம்பித்தார்.

எந்த வீடு நினைத்த பட்ஜெட்டில் கட்டி முடிந்து இருக்கிறது? நினைத்ததை விட 1-2 லகரங்கள் அதிகமாகவே செலவானது. பட்ஜெட்டுக்கு வங்கிக்கடன், அதிகமாக ஆன செலவுக்கு நட்பு வட்டாரங்கள் என ஒரு வழியாக வீட்டைக் கட்டி முடித்தார்.

தவழ்ந்து கொண்டிருந்த மகன், நடக்க ஆரம்பித்து விட்டான். அப்பா நினைத்ததை சாதித்து விட்டார். மகனும் புது வீட்டில் விளையாட ஆரம்பித்துவிட்டான். ஆனால், இப்பொழுதெல்லாம், வாங்கும் சம்பளத்தில் பெரும்பகுதி வங்கிக்கடனை அடைக்கவே சரியாக இருக்கிறது. மாதக்கடைசியில் வீட்டுச்செலவுகள் கையைக் கடிக்கிறதே? என்ன செய்யலாம்?
"மகன்தான் இப்பொழுது நடக்க ஆரம்பித்துவிட்டானே, நீ ஏன் தற்காலிகமாக ஏதாவது ஒரு தனியார் பள்ளிக்கு போகக்கூடாது?" மனைவியிடம் விண்ணப்பம். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு மனைவியும் அருகிலிருக்கும் தனியார் பள்ளிக்கு போக ஆரம்பித்துவிட்டாள்.
மகன் சந்தொஷமாக ஒடுகிறான், ஆடுகிறான், துள்ளி விளையாடுகிறான் - பாட்டியின் வீட்டில். நல்ல வேளை, இருவருக்கும் ஆசிரியர் பணி என்பதால் 'சனி, ஞாயிறு' இரண்டு நாட்கள் அன்பு மகனுடன் கழிக்க முடிகிறது அவனது பாட்டி வீட்டில்.

புது வீடு???(தலைப்பு…)

Saturday, 12 June 2010

அவளுடனான காதல்...

ஆண்டொன்று சுமந்தேன் நெஞ்சில் அவளை
என்னை அறவே பிடிக்கவில்லை என்று சொன்ன இவளை
விடு தொலையட்டும் என்றான் நண்பன்
வருவது வரட்டும் வா என்றான் இன்னொருவன்
அவள் வருந்தும்படி உன் வாழ்க்கையை வாழு என்றான் வேறொருவன்
வாழ்கிறேன் -
அவள் வருந்துவாள் என்றால் மாட்டேன்…

 >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

தேவதை நீ காதல் செய்வதால்
இந்த காதலர் தினத்தை காதலரோடு,
காதலும் கொண்டாடுகிறது.

இரண்டு கவிதைகள் - 1...

மொழி...


மூன்று வயதுவரை அன்புத்தாயிடம் கற்றறிந்தேன்
வீட்டில் பேசும் கன்னட மொழியை…
பள்ளியில் ஆசிரியரிடம் கற்றறிந்தேன்
மற்றவர்களிடம் பேசும் அழகிய தமிழ் மொழியை…
கல்லூரியில் நண்பர்கள் மற்றும் அண்ணண்களின் உதவியோடு கற்றறிந்தேன்
வெளியுலகில் பேச, வருமானம் ஈட்ட ஆங்கில மொழியை…
ஆனால்,
எவ்வளவோ முயன்றும்
எப்போது கேட்டாலும் ஆனந்தம் தரும்,
ஒன்றரை வயதே ஆன நீ பேசும் மழலை மொழியை மட்டும்
என்னால் கற்றுக்கொள்ள முடியாதது ஏன்?
அது, உங்களைப் போன்ற குட்டி தேவதைகளுக்கும், தேவ தூதர்களுக்கும் மட்டுமே சொந்தமான மொழியோ?
மாமாவுக்கு விடை சொல்வாயா, என் அக்கா பெற்றெடுத்த "முத்து" மாப்பிள்ளையே?

நவீனம்…


என்னைத் தாலாட்டி உறங்கவைக்க
         என் அன்னையைப் பெற்ற தாயே இருந்தார்…
என் மாப்பிள்ளையைத் தாலாட்ட அவர்
        இல்லாவிட்டாலும், அவரது பருத்திப்புடவை தொட்டிலாய்…
ஆனால் இனி,
என் பிள்ளைகளுக்கும், இனிவரும் சந்ததிக்கும்.!?!?
சுடிதாரில்தான் தொட்டில் கட்ட முடியுமா? - இல்லை
நைலான்தான் பருத்தியின் சுகம் தந்துவிடுமா?
என்ன நவீன உலகமோ போங்கள்?


காக்க…காக்க…

சம்பவம் 1



இடம்:சோழங்கநல்லூர் சந்திப்பு.
நாள்: ஒரு திங்கட்கிழமை
அது நான் நாவலூர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த நேரம். அப்பொழுதெல்லாம் நானும் எனது மதுரைக்கார நண்பனும் அவனது 'splendor +'ல் தான் அலுவலகம் போவோம்.காலையில் நான் ஓட்டிப்போவேன், மாலையில் அவன் ஓட்டி வருவான்.(பெட்ரோல் அவனே போட்டுப்பான். பாசக்கார பய)
அன்றும் அப்படிதான் அலுவலகம் போய்க்கொண்டிருந்தோம். சோழங்கநல்லூரில் புதிதாக சிக்னல் பொருத்தப்பட்ட நேரம்.
ECR link road OMRல் இணையும் இடம். தினமும் அந்த வழியேதான் வருவோம். அன்றுதான் சிக்னல் workஆக ஆரம்பித்து இருந்தது.
சிக்னலில் சிகப்பு. அதனால் அது Free left ஆ இல்லையா என்பதில் எனக்கு குழப்பம்.
உடனே நான் பின்னாலிருந்த நண்பனிடம்" டே இது Free leftஆ இல்லயா?" எனக் கேட்டது அவன் காதில் விழுந்ததோ இல்லயோ. அங்கிருந்த கான்ஸ்டபில் காதில் நன்றாகவே விழுந்தது.
(ஆஹா. சிக்கிட்டானுங்க அடிமைங்க)
நான் வண்டியை நிறுத்திதான் நண்பனிடம் கேட்டுக்கொண்டு இருந்தேன். அவன் " Free leftதான் டா. யேன் நிறுத்துற? விடு போலாம்" என்றான்.
அதற்குள் கேப்டன் தேவாரம்(கான்ஸ்டபில்) வந்துவிட்டார்.
"அதான் சிக்னல் போட்டு இருக்குள்ள. எங்க போற நீ?"
 நண்பன்: "சார் இது Free left தானே?"
தேவாரம்: "என்ன நீ ரூல்ஸ் லாம் பேசுறே? வண்டிய ஓரங்கட்டு"(மாட்னோம்டா மாப்ள)
ஓரங்கட்டினா அங்க வெள்ளையும் சொள்ளையுமா இன்னொருத்தர். (ஆபீசராமா!!!)*வண்டி யாருது? லைசென்ஸ் இருக்கா?
*பேப்பர்ஸ் இருக்கா? னு எல்லார்கிட்டயும் கேக்குற அதே கேள்விய கேட்டார்.
நானும் எல்லாம் கொடுத்தேன். வாங்கி வெச்சுகிட்டாரு.
"500ரூபா ஃபைன் கட்டிட்டு வாங்கிட்டு போ" என்றார்.
(நாட்டாமை… தீர்ப்ப மாத்து)
"சார் நாங்க போகல. Free leftஆ இல்லயானு நின்னு பேசிட்டு இருந்தோம். அவ்ளோதான்" என்றேன் நான்.
"அதெல்லாம் தெரியாது. நான் இன்ஸ்பெக்டர்க்கு சொல்லிட்றேன். நீங்க அவர் கிட்ட பேசிக்கோங்க"
என்று outgoingஏ போகாத Mobileல் பந்தாவாக நம்பர் டயல் செய்தார்.
அய்யய்யோ!! இருக்குற ரெண்டே இப்டி உயிர வாங்குதுங்க. இதுல பெரிய பூதம் வேற வரணுமா?
"சார் சார்! வேணாம் சார் ! வேணாம் சார்!" என பதுங்கினோம்.
"அப்டினா 100ரூபா கொடுத்துட்டு கெளம்புங்க" என மொய்க்கணக்கு எழுத சொன்னார்.(பக்கத்தில் இன்னொருவன் லைசென்ஸ் இல்லாமல் 200 ரூபாய் மொய் எழுதிக்கொண்டு இருந்தான்)
நாங்கள் யோசிப்பதற்குள், "நீங்க இன்ஸ்பெக்டர் கிட்டயே பேசிக்கோங்க பா" என மறுபடியும் "சென்னை-28 சிவா" ஸ்டைலில் மொபைலில் நம்பர் டயல் செய்தார்.
வேறு வழி இல்லாமல், 100 ரூபாயைய்க் கொடுத்தோம். (இன்னைக்கு யார் மூஞ்சில முழிச்சேன்?)
"சார் வெளியூர் பசங்க. சிக்னல் எப்டினு தெரியாமதான் இப்டி பன்னிட்டோம். பெட்ரோல் போட கூட காசு இல்ல சார்." என நண்பன் செண்டிமெண்டாக bittu போட.
ஆபீசரின் கல் மனதில் ஈரம் கசிந்து 50 ரூபாயை திருப்பி கொடுத்தார்.கடைசியாக கிளம்பும் போது "வெளியூர் பசங்க, எங்கயாவது மோதி அடி பட்டுட்டா? அப்புறம் உங்க அப்பா அம்மாக்கு யாருப்பா பதில் சொல்வா? அதுக்காகதான் நாங்க இப்டிலாம் உங்கள கண்ட்ரோல் பண்றோம்" என்றார். (புத்தி சொல்றாராமா!!!!)
அந்த இடத்தில்தான் தமிழக காவல்துறை தனது தனித்தன்மையைக் காட்டி நின்றது.

சம்பவம் 2

இடம்: சென்னை மத்திய புகைவண்டி நிலையம்(அட அதாங்க Chennai Central station

போன சம்பவத்துலயாவது Two wheelerல போய் சிக்னல (மதிச்சும்)மதிக்காமதானே மொய் எழுதினோம். இந்த சம்பவத்துல கொடுமைய கேளுங்களேன்… 
இந்த தடவ மொய் வெச்சது நான் இல்ல. என்னோட அரண்மனைத் தோழன்(Room mate).
அவனோட சொந்தக்காரங்க யாராவது சென்னை வந்தா கூட மொபைல்லயே பேசி வழியனுப்பி வைப்பான். அன்னைக்கு அவனோட Friend ஒருத்தவங்க 
( எந்த Friend(boy/gal)னு நான் சொல்ல மாட்டேன் பா) சென்னை வழியா ஈரோடு போனாங்க.(அவங்க சொந்த ஊரு நம்ம நட்பு மாநிலம் ஆந்திரா, படிச்சது ஈரோட்டுல. காலேஜ் முடிச்சு டிகிரி பட்டம் வாங்க வந்தாங்க)சரி போறதே போறோம், அப்டியே கடைசியா இவனையும் பார்த்துட்டு போலாமேனு ஸ்டேசன் வர சொன்னாங்க. 
Night 12.30 மணிக்குதான் train. அரண்மனைல இருந்து 10.30க்கு கெளம்பினான். திருவான்மியூர்ல இருந்து பஸ் பிடிச்சு 11.15கெல்லாம் central போயிட்டான். ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் இப்பவே எடுத்தா 1 மணி  நேரம்தானே அதுக்கு Validityனு சொல்லி 12மணி வரைக்கும் சுத்திட்டு அப்புறமா எடுத்தான்.
Trainம் ஒரு 15நிமிசம்தான் லேட்டாதான் வந்துச்சு. 

அவங்கள பார்த்து பேசிட்டு, (
ஈரோடுக்கு நீயும் வா போலாம்னு அவங்க compel பண்ணது, இவன் "அங்க வந்தா அப்புறம் நீ திரும்ப ஊருக்கு போகும்பொது நான் ரொம்ப கஷ்டப்படுவேன். அந்த கஷ்டத்த கொஞ்சமா இப்பவே பட்டுக்கறேன்"னு வந்த கண்ணீரையும், 'நீ வெளியவே நில்லு'னு ஸ்டேசனுக்கு வெளியவே நிறுத்தி வெச்சுட்டு, உள்ள போனது, அத பத்திலாம் நான் சொல்ல மாட்டேன் பா.) 

போகாதே… போகாதே… நீ பிரிந்தால் நான் இறப்பேன்..
எல்லாம் முடிஞ்சு அவங்கள (பிரிய முடியாம) வழியனுப்பி வெச்சுட்டு, ஸ்டேசன் விட்டு வெளிய வரும் போதுதான் சம்பவம் நடந்துச்சு. 

அங்க இருந்த கேப்டன் பிரபாகரன் இவனை கூப்பிட்டு செக் பண்ணியிருக்காரு. இவனும் கம்பெனி Id card, Platform ticket எல்லாம் காமிச்சு இருக்கான். இருந்தாலும் என்ன ப்ரயோஜனம்?(Id card எடுக்கும் போது உள்ள purseல இருந்த மஹாத்மா காந்தி படம் போட்ட பேப்பர பார்த்துட்டாரு) அவர் மொய் வாங்க  ப்ளான் போட்டுட்டாரு. 

அதனால" உன்னை பார்த்தா சந்தேகமா இருக்கு. நாளைக்கு ஸ்டேசன்ல வந்து கையெழுத்து போட்டுட்டு Id card வாங்கிக்கோனு" எடுத்து வெச்சுகிட்டார். (அவன் மீசை வெச்சாலாவது பெரிய பையன் மாதிரி இருப்பான். "நீ மீசை வைக்கலேனா அழகா இருக்கேனு", யாரோ சொல்லிட்டாங்கன்னு, மீசை வைக்காம இஸ்கூலு பையன் மாதிரி இருப்பான். 
அவன் தீவிரவாதியோனு கேப்டனுக்கு சந்தேகம்.என்ன கொடுமை சார் இது?)

மீசை வைக்கலனாலும் அவன் ஒரு small Terror. இருந்தாலும் அவர் ஒரு அரசாங்க அதிகாரி அப்பிடிங்கிற மரியாதைக்காக அமைதியா நின்னான். இவன் கூட இன்னொருத்தரையும் மொய் வாங்க பிடிச்சு வெச்சிருந்தாரு கேப்டன். எவ்வளவோ மறைமுகமா சொல்லி பார்த்தாரு கேப்டன். இவங்க மொய் வைக்கிற மாதிரி இல்ல. அதனால கடைசில அவரே," சரி இருக்குறத கொடுத்துட்டு கெளம்புங்க"னு சொல்லிட்டாரு. 

அரண்மனைத் தோழன் 200ரூபா வெச்சு இருந்தான். பக்கத்துல இருந்தவர் கிட்ட சின்ன நோட்டெல்லாம் இல்ல. ஒத்தையா ஒரே 500ரூபா தான் இருந்துச்சு. அரண்மனைத் தோழன் "சார் இந்த நேரத்துக்கு மேல பஸ் கூட இருக்காது. ஆட்டோல போக கூட காசு இல்ல"னு சொல்லி இருக்கான். அவரு தமிழ்நாடு போலீஸ் ஆச்சே. பொதுமக்களின் நண்பன். அதனால அரண்மனைத் தோழனுக்கு ஆட்டோவுக்காக 50ரூபா கொடுத்து, வழியனுப்பி வெச்சாரு.(இவர் அல்வா… ச்சி… அல்லவா நண்பர்)
கேப்டன் நண்பருக்கு டாடா சொல்லிவிட்டு ஆட்டோ பிடித்து சோகமாக அரண்மனை வந்து சேர்ந்தான் நண்பன்.
(
சோகத்துக்கு காரணம் கேப்டன் இல்லீங்க. ஈரோடு போய்கிட்டு இருக்கிறவங்கதான் காரணம்) 

சட்டை கிழிஞ்சிருந்தா தெச்சு உடுத்திக்கலாம்…
நெஞ்சு கிழிஞ்சிருக்கு, எங்க முறையிடலாம்?..

இரண்டு கவிதைகள்...

எதிர்வீட்டு கோலம்…


குனிந்து வாசல் பெருக்கி சுத்தம் செய்து,
கோலமிட்டது என்னவோ அவள் வீட்டு வாசலில்தான்

ஆனால் குப்பையானது என் மனது,

அவள் போட்ட பூக்கோலம் என்னவோ அழகுதான்,

ஆனால் போர்க்களமாகி அலங்கோலமானது என் மனது


முத்தங்களால் உன்னை...


கனவனும் மனைவியும் பணிபுரிந்தே ஆக வேண்டிய இந்த இயந்திர உலகில், வீட்டில் வீட்டு வேலைகளில் மனைவிக்கு துணை புறியாத கனவனின் கிறுக்கல்…

தூக்கம் தளும்பும் உன்னை
முழுதாய் உறங்கவிடுவதில்லை நான்
இச்சைமொழி பேசிப்புணர்ந்து ஆழ்ந்துறங்கி
தானாய் விழித்தெழும் என்முன்
'அலாரம்' வைத்தெழுந்து அரைத்தூக்கத்தில் தயாரித்த
'காப்பி'யை நீட்டுகிறாய்
சிறுபொழுதினில் 'டிபன்' செய்து-பரபரப்பாய்
'லன்ச்'சும் கட்டிக்கொடுத்து விடுகிறாய்
உட்கார்ந்த இடத்திலேயே கையலம்ப நீரெனக்கு.
எல்லாம் முடித்து அவசர அவசரமாய்
அலுவலகம் கிளம்புகிறாய்
நகரநெரிசலில் பேருந்து உரசலில்
அலுவலக 'இரட்டை அர்த்த' வார்த்தைகளில்
உடலும் உள்ளமும் கசகசத்துத் திரும்புகிறாய்
மீண்டும் சமைத்து இரவுணவு முடித்து ஓய்ந்துறங்குகையில்
உன்னை முழுதாய் உறங்கவிடுவதில்லை நான்…
மறுவிடிகாலை அலாரம் வைத்தெழுந்து….
சிறுவுதவியும் செய்யாது
தப்பித்துக்கொள்கிறேன் நான்
முத்தங்களால் உன்னைக் குளிர்வித்து…

பி.கு: ஆனந்த விகடனின் ரொம்ப பழைய பிரசுரத்தில் இருந்து சுட்டது