Friday, 28 May, 2010

நண்பர்கள்…


நண்பர்கள்-
ஆறு எழுத்தில் ஒரு அழகிய உலகம்.

இவர்கள் மட்டும் இல்லா விட்டால்???


*பால்வாடியில்(அரை class) மண் கொழித்து விளையாடியிருக்க மாட்டேன்

*முதல் நாள் முதலாம் வகுப்பில், சரோஜினி டீச்சரிடம்  என்னை அப்பா விட்டு சென்ற போது ஆரம்பித்த அழுகையை நிறுத்தியிருக்க மாட்டேன்

*பள்ளி முடிந்து மாலை வேளையில், புதிதாக கோவில் கட்ட குவித்து வைத்திருக்கும் மணலில் விளையாடி, சட்டை அழுக்காகி அம்மாவிடம் அடி வாங்கியிருக்க மாட்டேன்

*என் வீட்டு மாம்பழம், கொய்யாவை விட அடுத்தவர் வீட்டு  (திருட்டு) மாம்பழம், கொய்யாதான் சுவையானது என்பது எனக்கு தெரியாமலே போயிருக்கும்

*சனி, ஞாயிறுகளில் கவை(ஒண்டி வில்) கொண்டு  சிட்டுக்குருவி அடித்து, கூட்டாஞ்சோறு சமைக்க கற்றுக்கொண்டிருக்க மாட்டேன்

*கில்லி தாண்டு விளையாடி எதிராளியின் நெற்றியை பதம் பார்த்து, தக்காளி சட்னி போட்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது

*வேதியியல் சிறப்பு வகுப்பை புறக்கணித்து விட்டு Matnee show பார்ப்பதில் இருக்கும் சுகம் எனக்கு தெரியாமலே போயிருக்கும்

*பள்ளி இறுதியாண்டு விழாவில், எனக்கு பெண் வேடமிட்டால் கூட(மாறு வேடம்) நன்றாகத்தான் இருக்குமென்று தெரியாமல் போயிருக்கும்

*பொதுத்தேர்வு இறுதி நாளன்று, எனது வெள்ளை சட்டையில் மை தெளிக்கப்படாமல் வெள்ளையாகவே இருந்திருக்கும்

*"தேர்வு முடிவுகள் வெளியீடு" -'நினைத்த அளவுக்கு மதிப்பெண் வரவில்லையே' என சோகமாக net  centerஐ விட்டு வெளியேற, 'விடு மச்சான். உன்னை விட 10 மார்க்கு கம்மி. நான்லாம் feel பன்னுறேனா?' என மனதை தேற்ற ஆள் இல்லாமல் இருந்திருக்கும்…


*யாருமே அறிமுகமில்லா கல்லூரியில் தனியாகவே வாழ்க்கையைக் கடத்தியிருக்க வேண்டி வந்திருக்கும்

*பின்புறம் உள்ள சந்தன மரக்காடுகள் கடந்து Night show Film  போயிருக்க வாய்ப்பு கிடைத்திருக்காது

*Computer lab ல் புதிய காலணிகள்(slippers) காணாமல் போகாமல் இருக்க Bata cheppals use செய்யும் idea கொடுக்க ஆள் இருந்திருக்காது

*Lecture சுத்தமாக புரியாமல் இருந்த போதும், semester  clear செய்ய  semester க்கு முன் Free tution  எடுக்க ஆள் இல்லாமல் போயிருக்கும்

*பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் Solution அபிஸேகங்கள், Warden இடம் enquiry - இவைகளுக்கு அவசியம் இருந்திருக்காது

*"Semester Result" - "மச்சான் எனக்கும் 1 CUP டா. Revaluation போட்டா, நிச்சயம் 36 போட்ருவாங்க. Clear பன்னிடலாம்" என மனதை தேற்ற ஆள் இருந்திருக்காது

*Industrial Visit என்ற பெயரில் Industry ஐ 10 நிமிடம் visit செய்து விட்டு, 2  நாட்கள் Tour  சுற்றிய இனிமை கிடைத்திருக்காது

*Symposium என்ற பெயரில் ஒரு வாரம் O.D , 2 நாட்கள் ருசியான உணவு உண்ண வாய்ப்பு கிடைத்திருக்காது

*Culturals ல் எவ்வளவு தான் சுமாராக ஆடினாலும், "Super da மச்சி" என கட்டித் தழுவி உற்காகமூட்ட ஆள் இருந்திருக்காது

*":Any doubt" என Lecturer  கேட்கும் சமயம் பார்த்து, உறங்கிக் கொண்டிருப்பவனை எழுப்பி விட்டு, அவனை வைத்து Comedy Kemedy செய்யப்படாமல் இருந்திருக்கும்

*எனக்கு பின்னால் இருந்த எதையோ அவள் பார்த்து சிரிக்க, "மச்சான், அவ உன்ன பார்த்துதான் சிரிக்கிறா. உன்னையேதான் look விட்றா.  Something Something டா" என கத்திரிக்காயை விதைக்க ஆள் இல்லாமல் போயிருக்கும்

*Class முடிந்து Hostel போகும் Junior பெண்ணின் பெயரை அழைத்து விட்டு, ஒளிந்து கொள்ள, அவள் ஜன்னலில் நிற்கும் நான் தான் அழைத்தேன் என நினைத்து, முறைத்த அந்த சம்பவம் நடந்திருக்காது

*யாரோ பகைக்காக, யாரையோ நான் திட்டி, "அதே கட்டை குரல்" என Girls Hostel முழுக்க எனது குரல் தேடப்பட்டு இருக்காது 

*கல்லூரியின் கடைசி நாளில், என் கண்கள் குளமாகியிருக்க வாய்ப்பு இருந்திருக்காது

No comments:

Post a Comment