Friday, 28 May 2010
நினைவுகள்…
காலைல கேபின்ல நுழைஞ்சதும், பக்கத்துல இருக்குற கொலீக்ஸ் "Good Morning" சொல்லுவாங்க. Weekend என்ன பண்ணேனு கேப்பாங்க? நானும் "Nothing Special" னு சொல்லுவேன். பதிலுக்கு நானும் "நீங்க என்ன பண்ணீங்க?" னு கேப்பேன். அவனும் "Nothing Special"னு சொல்வான். நம்ம காலேஜ்ல என்னைக்காவது இந்த "Nothing Special"ன்ற வார்த்தைய யூஸ் பண்ணியிருக்கோமா?
எப்படியோ,இது தான் வாழ்க்கை. வாழ பழகிக்கணும் இந்த Corporate cultureல.
கொடுமை...
இனிதாய் விடிந்த அந்த நாளில்,
நான் பார்த்த அந்த காட்சி,
என் மனதை காயப்படுத்தி விட்டது.
அப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
அப்படி நடக்க வைத்த இறைவனை
குற்றவாளி கூண்டில் நிறுத்தினாலும் தவறில்லை..
அப்படி என்னதான் நடந்தது தெரியுமா?
எப்பொழுதும் 4 கால்களில் நடக்கும்
எங்கள் எதிர் வீட்டு நாய்
அன்று காலில் அடி பட்டதால் நொண்டி நொண்டி 3 கால்களில் நடந்தது….
என்ன கொடுமை சார் இது?
நண்பர்கள்…
நண்பர்கள்-
ஆறு எழுத்தில் ஒரு அழகிய உலகம்.
இவர்கள் மட்டும் இல்லா விட்டால்???
*பால்வாடியில்(அரை class) மண் கொழித்து விளையாடியிருக்க மாட்டேன்
*முதல் நாள் முதலாம் வகுப்பில், சரோஜினி டீச்சரிடம் என்னை அப்பா விட்டு சென்ற போது ஆரம்பித்த அழுகையை நிறுத்தியிருக்க மாட்டேன்
*பள்ளி முடிந்து மாலை வேளையில், புதிதாக கோவில் கட்ட குவித்து வைத்திருக்கும் மணலில் விளையாடி, சட்டை அழுக்காகி அம்மாவிடம் அடி வாங்கியிருக்க மாட்டேன்
*என் வீட்டு மாம்பழம், கொய்யாவை விட அடுத்தவர் வீட்டு (திருட்டு) மாம்பழம், கொய்யாதான் சுவையானது என்பது எனக்கு தெரியாமலே போயிருக்கும்
*சனி, ஞாயிறுகளில் கவை(ஒண்டி வில்) கொண்டு சிட்டுக்குருவி அடித்து, கூட்டாஞ்சோறு சமைக்க கற்றுக்கொண்டிருக்க மாட்டேன்
*கில்லி தாண்டு விளையாடி எதிராளியின் நெற்றியை பதம் பார்த்து, தக்காளி சட்னி போட்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது
*வேதியியல் சிறப்பு வகுப்பை புறக்கணித்து விட்டு Matnee show பார்ப்பதில் இருக்கும் சுகம் எனக்கு தெரியாமலே போயிருக்கும்
*பள்ளி இறுதியாண்டு விழாவில், எனக்கு பெண் வேடமிட்டால் கூட(மாறு வேடம்) நன்றாகத்தான் இருக்குமென்று தெரியாமல் போயிருக்கும்
*பொதுத்தேர்வு இறுதி நாளன்று, எனது வெள்ளை சட்டையில் மை தெளிக்கப்படாமல் வெள்ளையாகவே இருந்திருக்கும்
*"தேர்வு முடிவுகள் வெளியீடு" -'நினைத்த அளவுக்கு மதிப்பெண் வரவில்லையே' என சோகமாக net centerஐ விட்டு வெளியேற, 'விடு மச்சான். உன்னை விட 10 மார்க்கு கம்மி. நான்லாம் feel பன்னுறேனா?' என மனதை தேற்ற ஆள் இல்லாமல் இருந்திருக்கும்…
*யாருமே அறிமுகமில்லா கல்லூரியில் தனியாகவே வாழ்க்கையைக் கடத்தியிருக்க வேண்டி வந்திருக்கும்
*பின்புறம் உள்ள சந்தன மரக்காடுகள் கடந்து Night show Film போயிருக்க வாய்ப்பு கிடைத்திருக்காது
*Computer lab ல் புதிய காலணிகள்(slippers) காணாமல் போகாமல் இருக்க Bata cheppals use செய்யும் idea கொடுக்க ஆள் இருந்திருக்காது
*Lecture சுத்தமாக புரியாமல் இருந்த போதும், semester clear செய்ய semester க்கு முன் Free tution எடுக்க ஆள் இல்லாமல் போயிருக்கும்
*பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் Solution அபிஸேகங்கள், Warden இடம் enquiry - இவைகளுக்கு அவசியம் இருந்திருக்காது
*"Semester Result" - "மச்சான் எனக்கும் 1 CUP டா. Revaluation போட்டா, நிச்சயம் 36 போட்ருவாங்க. Clear பன்னிடலாம்" என மனதை தேற்ற ஆள் இருந்திருக்காது
*Industrial Visit என்ற பெயரில் Industry ஐ 10 நிமிடம் visit செய்து விட்டு, 2 நாட்கள் Tour சுற்றிய இனிமை கிடைத்திருக்காது
*Symposium என்ற பெயரில் ஒரு வாரம் O.D , 2 நாட்கள் ருசியான உணவு உண்ண வாய்ப்பு கிடைத்திருக்காது
*Culturals ல் எவ்வளவு தான் சுமாராக ஆடினாலும், "Super da மச்சி" என கட்டித் தழுவி உற்காகமூட்ட ஆள் இருந்திருக்காது
*":Any doubt" என Lecturer கேட்கும் சமயம் பார்த்து, உறங்கிக் கொண்டிருப்பவனை எழுப்பி விட்டு, அவனை வைத்து Comedy Kemedy செய்யப்படாமல் இருந்திருக்கும்
*எனக்கு பின்னால் இருந்த எதையோ அவள் பார்த்து சிரிக்க, "மச்சான், அவ உன்ன பார்த்துதான் சிரிக்கிறா. உன்னையேதான் look விட்றா. Something Something டா" என கத்திரிக்காயை விதைக்க ஆள் இல்லாமல் போயிருக்கும்
*Class முடிந்து Hostel போகும் Junior பெண்ணின் பெயரை அழைத்து விட்டு, ஒளிந்து கொள்ள, அவள் ஜன்னலில் நிற்கும் நான் தான் அழைத்தேன் என நினைத்து, முறைத்த அந்த சம்பவம் நடந்திருக்காது
*யாரோ பகைக்காக, யாரையோ நான் திட்டி, "அதே கட்டை குரல்" என Girls Hostel முழுக்க எனது குரல் தேடப்பட்டு இருக்காது
*கல்லூரியின் கடைசி நாளில், என் கண்கள் குளமாகியிருக்க வாய்ப்பு இருந்திருக்காது
Subscribe to:
Posts (Atom)