Sunday, 21 March 2010

Q…(க்யூ)..

பிரதி மாதம் முதல் தேதியன்று,

ATM வாசலில் அரை மணி நேரம் கால் கடுக்க நிற்கும் போது

வரும் கால் வலி உணர்த்தியது-

அம்மா நியாய விலைக்கடைக்கு சர்க்கரையும், மண்ணெண்ணையும் வாங்க அனுப்பும் போது,

"நான் லாம் போ மாட்டேன். வேணும்னா நீயே போய் வாங்கி கோ"

என்று கூறியது…

 

 நாணய மதிப்பு…

பால்வாடி- அம்மா கொடுத்த 25 பைசாவுக்கு
ஆலமரத்தடி பாட்டி கடையில் 1 ஜவ்வு மிட்டாயும்,
1கடலை மிட்டாயும் வாங்கிய என்னால்,

 

1 - 3 வகுப்பு- 50 பைசாவுக்கு
'மூக்குப்பொடி தாத்தா' பெட்டி கடையில்
புளிப்பு மிட்டாய் வாங்கிய என்னால்,

 

4 - 5 வகுப்பு- 1 ரூபாய்க்கு
'அமுதம் ஐஸ் கம்பெனி' ஐஸ் காரனிடம்
பால் ஐஸ் வாங்கி உறிஞ்சிய என்னால்,

 

6 - 8 வகுப்பு- 5 ரூபாய்க்கு
'சாந்தா மளிகை ஸ்டோர்ஸ்'-ல்
கேக் வாங்கி அதை நண்பர்களுக்கு பங்கிட்ட என்னால்,

 

9 - 10 வகுப்பு- 10 ரூபாயில்
8 மட்டும் செலவு செய்து, 2 ரூ தினமும் சேர்த்து
வார இறுதியில் பக்கத்து ஊர் டெண்டு கொட்டகையில்
சூப்பர் ஸ்டார் படம் பார்த்த என்னால்,

 

11 - 12 வகுப்பு- 25 ரூபாயில்
பானி பூரி-10ரூ, பஸ் டிக்கெட்- 10ரூ,
அபிராமி தியேட்டரில் இரண்டாம் வகுப்பு -20ரூ.
அதற்கு 5ரூ சேமிப்பு என பட்ஜெட் போட்ட என்னால்,

 

கல்லூரி(சொர்க்கம்)-  I.V, Treat, Symposium
என்று ஊரிலிருந்து ஹாஸ்டல் திரும்பும் போதெல்லாம்
300,500 என(மாதத்திற்க்கு) அப்பாவை மொய் எழுத வைத்த என்னால்,

 

Place ஆவதற்க்கு முன் Treat-க்கு தனம் மெஸ்,
Place ஆன பின்பு பஞ்சாபி தாபாவில் Treat,
என இருந்த என்னால்,

 

இப்பொழுதெல்லாம்,
 அந்த இடங்களில் எந்த பொருளும் வாங்க முடிவதே இல்லை

 

காரணம்- Debit/Credit card ஸ்வைப் செய்யும் வசதி இல்லை அங்கே.
அதனால் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும் என் வாழ்வில்
நாணய மதிப்பு உயர்ந்து விட்டதை.

 

Thursday, 18 March 2010

மூன்று கவிதைகள்...

“காதலர் தினம்”

அனைவருக்கும் பிப்ரவரி-14 காதலர் தினம்,

ஆனால் எனக்கு மட்டும்

என் அன்பை அவள் புரிந்து கொள்ளும் நாள் தான்-

" பிப்-14"…

 

முடியுமா????

"உன் மீது எனக்கு காதல் வரும் வரை காத்திருக்க முடியுமா?"

-என்று கேட்கிறாள் அவள்….

அவளைப் பார்க்கவே 23 வருடம் காத்திருந்த எனக்கு,

இது என்ன? -சாதாரணம்….  

 

 ஏன்???

"உன்னை பிடிச்சிருக்கு"

என்று இரண்டே நொடியில் எழுத முடிந்த எனக்கு,

அந்த கடிதத்தை அவளிடம் கொடுக்க மூன்று ஆண்டுகளாகியும்

தைரியம் வராதது ஏன்????

 

 

கல்பனா செல்லம்..

மற்றவர்களால் உண்டான மன கஷ்டங்கள்
உன்னுடன் விளையாடும் போது மறந்தேன்
நீ உண்டாக்கிய மன கஷ்டத்தை எப்படி மறப்பேனடி
உன்னுடன் விளையாடும் போது உன் நகங்கள் கீறி
உண்டான காயங்கள் வலிக்கவில்லை
நீ பிரிந்ததால் உண்டான காயம் வலிக்கிறதடி
உன்னை அள்ளி அணைக்கும் போது மெண்மை என்னவென்று உணர்ந்தேன்
என்னை நீ பிரிந்த போது கொடுமை என்னவென்று உணர்ந்தேனடி
இவ்வுலகில் எங்கோ, யாரோ உன்னை மகிழ்ச்சியாய் பார்த்து கொள்கிறார்கள்
என்ற நம்பிக்கையுடன் உயிர் வாழ்கிறேன்
உன் நினைவுகளுடன்
'என் வீட்டு செல்ல பூனைக்குட்டியே'

அவள் கண்கள்

முதலில் அவளது கண்களை கைது செய்ய சொல்லுங்கள்

ஏனென்றால்

அவைகள்தான் எனது இதயத்தை திருடின…. 


 பிழை

ஏன் எனது காதலை மறுக்கிறாய்,

நான் எழுதிய காதல் கடிதத்தில் பிழையா? என்றேன்

இல்லை

உனது காதலே பிழை

-என்றாள் அவள்