Q…(க்யூ)..
பிரதி மாதம் முதல் தேதியன்று,
ATM வாசலில் அரை மணி நேரம் கால் கடுக்க நிற்கும் போது
வரும் கால் வலி உணர்த்தியது-
அம்மா நியாய விலைக்கடைக்கு சர்க்கரையும், மண்ணெண்ணையும் வாங்க அனுப்பும் போது,
"நான் லாம் போ மாட்டேன். வேணும்னா நீயே போய் வாங்கி கோ"
என்று கூறியது…
நாணய மதிப்பு…
பால்வாடி- அம்மா கொடுத்த 25 பைசாவுக்கு
ஆலமரத்தடி பாட்டி கடையில் 1 ஜவ்வு மிட்டாயும்,
1கடலை மிட்டாயும் வாங்கிய என்னால்,
1 - 3 வகுப்பு- 50 பைசாவுக்கு
'மூக்குப்பொடி தாத்தா' பெட்டி கடையில்
புளிப்பு மிட்டாய் வாங்கிய என்னால்,
4 - 5 வகுப்பு- 1 ரூபாய்க்கு
'அமுதம் ஐஸ் கம்பெனி' ஐஸ் காரனிடம்
பால் ஐஸ் வாங்கி உறிஞ்சிய என்னால்,
6 - 8 வகுப்பு- 5 ரூபாய்க்கு
'சாந்தா மளிகை ஸ்டோர்ஸ்'-ல்
கேக் வாங்கி அதை நண்பர்களுக்கு பங்கிட்ட என்னால்,
9 - 10 வகுப்பு- 10 ரூபாயில்
8 மட்டும் செலவு செய்து, 2 ரூ தினமும் சேர்த்து
வார இறுதியில் பக்கத்து ஊர் டெண்டு கொட்டகையில்
சூப்பர் ஸ்டார் படம் பார்த்த என்னால்,
11 - 12 வகுப்பு- 25 ரூபாயில்
பானி பூரி-10ரூ, பஸ் டிக்கெட்- 10ரூ,
அபிராமி தியேட்டரில் இரண்டாம் வகுப்பு -20ரூ.
அதற்கு 5ரூ சேமிப்பு என பட்ஜெட் போட்ட என்னால்,
கல்லூரி(சொர்க்கம்)- I.V, Treat, Symposium
என்று ஊரிலிருந்து ஹாஸ்டல் திரும்பும் போதெல்லாம்
300,500 என(மாதத்திற்க்கு) அப்பாவை மொய் எழுத வைத்த என்னால்,
Place ஆவதற்க்கு முன் Treat-க்கு தனம் மெஸ்,
Place ஆன பின்பு பஞ்சாபி தாபாவில் Treat,
என இருந்த என்னால்,
இப்பொழுதெல்லாம்,
அந்த இடங்களில் எந்த பொருளும் வாங்க முடிவதே இல்லை
காரணம்- Debit/Credit card ஸ்வைப் செய்யும் வசதி இல்லை அங்கே.
அதனால் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும் என் வாழ்வில்
நாணய மதிப்பு உயர்ந்து விட்டதை.
No comments:
Post a Comment