Thursday, 22 April 2010

தயக்கம்...

ஆரவாரமில்லாத அழகிய கடற்கரையில்
ரம்மியமான அந்தி மாலைப்பொழுதில்
மனதை வருடும் தென்றல் வீச,

யாரும் காண முடியாத அந்த படகு மறைவில்-
அவளிடம் அதை(அந்த ஒன்றை) கேட்கத் தயங்கினேன்.

'எங்கே தவறாக நினைத்து விடுவாளோ' என்று,

வயதுக்கோளாறு- ஆசையை அடக்க முடியாமல்,
கேட்டேவிட்டேன்
"ஒரே ஒரு மாங்கா  பீஸ்  கொடுப்பா. நான் வாங்கினது தீர்ந்திடுச்சு"
என்று என் தோழியிடம்.

சலவை..

வியர்வை நாற்றம் தெரியாமல் இருக்க
வாசனை திரவியம் தெளித்த சட்டை மீது

ஒரு துளி தேநீர் கொட்டியதால்
சலவைக்கு போட முடிந்த எனக்கு,

எனது புதிய சட்டையை, அரை வயதே ஆன
அக்காவின் மகன் முதல் முறை

பன்னீரால் நனைத்த போதும்
சலவைக்கு போட மனம் வராதது ஏன்?

 வரம்…

இறைவன் என் முன் தோன்றி
"உனக்கு என்ன வரம் வேண்டும்?"
எனக் கேட்டால்-

நான் கேட்பேன் "அவள் வீட்டில் முகம் பார்க்கும்
கண்ணாடியாக தினமும் அவளை தரிசிக்கா விட்டாலும்,

அவள் வீட்டு தோட்டத்தில் ரோஜாவாகும் வரம் கொடு.
ஒரு நாளாவது அவள் கூந்தலை தழுவி விட்டு
உயிர் விடுகிறேன்"- என்று..