ஆர்யா - பாஸ்கரன், நயன்தாரா - சந்திரிகா
சந்தானம் - நல்லதம்பி, பஞ்சு சுப்பு - சரவணன்
சித்ரா லக்ஷ்மணன் - சண்முக சுந்தரம், ராஜேந்திரன் - வேல்பாண்டி
இசை - யுவன், இயக்கம் - M.ராஜேஷ்
வெளியீடு - ரெட் ஜெய்ண்ட் மூவீஸ்
படத்துக்கு டைட்டில் போடும் போதே 10.10னு மட்டுமே மணி காட்டுற கடிகாரத்துல நொடி முள் மட்டும் சுத்தி சுத்தி எழுத்துக்களை அழிக்கிற மாதிரி காமிச்சு டைரக்டர் ஏதோ சொல்ல வர்றாரு. அவரு என்ன சொல்ல வர்றார்னா?
ஒண்ணும் சொல்ல வரல. அந்த கடிகாரம் ரிப்பேராகிப் போய் ஓடாம நிக்குது. அவ்ளோதான்.
சந்தானம் ஹீரோவா நடிச்சிருக்கிற பாஸ் என்கிற பாஸ்கரன்ல, சாரி சாரி - ஆர்யா பாஸ்@பாஸ்கரனா நடிச்சிருக்கிற இந்த படத்துல சிவா மனசுல சக்தி எடுத்த அதே ஃபார்முலாவை யூஸ் பண்ணியிருக்காரு ராஜேஷ். கதைங்கிற வார்த்தைக்கு கூட ரெண்டு எழுத்து இருக்கு. ஆனா இந்த படத்துல???
ஜாலியா ஊர் சுத்திகிட்டு அரியர்ஸ பல வருஷமா க்ளியர் பண்ண டிரை பண்ற பாஸ்கரை - சந்திரிகா கரெக்ட் பண்ணனும்னு பாக்குறாங்க. ஆனா வேலையில்லாதவருக்கு அப்பா பொண்ணு கொடுக்க மாட்டாரேனு அவர மொதல்ல லைஃப்ல செட்டில் பண்ணிட்டு அப்புறமா கரெக்ட் பண்றாங்க. பாஸ் கூட அவரோட ஃப்ரெண்ட் நல்லதம்பி. ‘நண்பேன்டா’ங்கிற ஒரு வார்த்தைக்காக அவரு படுற இம்சை இருக்கே. அய்யோய்யோய்யோ! இதுதான் பாஸ் என்கிற பாஸ்கரன்.
சந்தானத்தை மட்டுமே நம்பி எவ்ளோ நாளைக்கு காலம் தள்ளுவீங்கன்னு தெரியல. படம் முழுக்க சந்தானம் சந்தானம் சந்தானம்தான். சொல்லப்போனா ஹீரோ இன்ட்ரொடக்சனுக்கு முன்னாடியே சந்தானம் இன்ட்ரோ. அதுவும் அந்த வழக்கமான அசட்டுச் சிரிப்போட. எவனோ ஓட்டின செகண்ட் ஹேண்ட் வண்டிக்கு அவரை வெச்சு புதுசா ரெஜிஸ்டர் பண்ற காமெடி, இன்னொரு ‘கிரி’ அக்கா ரகசியம்.
படத்தோட பெயரே ஆர்யாவோட கதாபாத்திர பெயர்தான்கிறதால அவரும் காமெடி செஞ்சே ஆக வேண்டிய கட்டாயம். அவரும் அவரால முடிஞ்சதை டிரை பண்ணியிருக்காரு. சந்தானமே முழுசா டாமினேட் பண்ணிடறதால ஆர்யாவுக்கு கெத்து கொஞ்சம் கம்மியா இருக்கு. சி.ம.ச ல ஜீவாவுக்கு இருந்த அளவுக்கு அழுத்தமில்ல. படமும் அதே மாதிரிதான். சி.ம.ச -க்கு 6 மார்க் போடலாம்னா இதுக்கு 4 மார்க்.
நயன்தாரா - கேக்கவே வேணாம். அம்மணிக்கு வயசாயிடுச்சுன்னு எல்லாரும் இந்த படத்தை பார்த்து கன்ஃபார்ம் பண்ணிடறாங்க. எப்பவும் போல ஹீரோயினுக்கு இந்த படத்துலயும் கேரக்டர் இல்லைங்கிறது கூட எனக்கு கோபம் இல்ல, ஹீரோவுக்கு வேலையே இல்லைனாலும் அவரை மாய்ஞ்சு மாய்ஞ்சு லவ் பண்றதுகூட எனக்கு கோபமில்லை, ஆனா அந்த லிப்-டு-லிப் சீன் வரும்போது கரெக்டா டைமிங் பார்த்து “அய்யய்யோ பிரபுதேவா பாவம்”னு எதுக்குய்யா தியேட்டர்ல ரன்னிங் கமெண்ட் கொடுக்குறீங்க? நாஞ்சென்ஸ்.
சந்தானம் பத்தி இங்க சொல்லணும்னா படத்துல அவரு வர்ற ஒவ்வொரு சீனையும் சொல்லியே ஆகணும். அதனால படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. மங்கூஸ் மண்டை மாமா சித்ரா லக்ஷ்மண், அண்ணன் சரவணனா சுப்பு, அரியர்ஸ் சுவாமிநாதன்னு எல்லாருமே ஒரு சில காட்சிகள்ல வந்தாலும் சிரிக்க வெச்சிருக்காங்க. நான் கடவுள்ல அப்படி கொடூரனா நடிச்ச ராஜேந்திரன்?!?!? உங்கள மாதிரி ஆளுங்களை பாலா மட்டும்தான் பயன்படுத்திக்குவாரு. ஆர்யாவோட சிபாரிசுல இங்க சேர்ந்தீங்களா?
ஷகீலா - ராஜேஷ் சார் எனக்கோரு உண்மை தெரிஞ்சாகணும். சி.ம.ச-லயும் இவங்க வந்தாங்க. இந்த படத்துலயும் வந்திருக்காங்க. இதுல ஏதாவது உள்குத்து இருக்கா ராஜேஷ் சார்? அதுலயும் அவங்க அந்த டுட்டோரியல்ல அந்த ஃபார்முலாவைதான் நடத்தணும்னு எதுக்கு செலக்ட் பண்ணினீங்க?
இசை - யுவனின் வழக்கமான சரக்குல கிக் கொஞ்சம் கம்மியா இருக்கு. யார் இந்த பெண்தான் நல்லா இருக்கு. பாஸூ பாஸூ பாஸு, தத்தி தாவும் - ஓ.கே. அய்லே அய்லேவும், மாமா மாமா பொண்ண குடு-வும் படத்துக்கு தேவையே இல்ல. எரிச்சலூட்டுது ரெண்டும்.
சி.ம.ச-ல பல்பு வாங்குற மாப்பிள்ளையா அடுத்த படமான இந்த ஹீரோ ஆர்யா வந்த மாதிரி, இதுல பல்பு வாங்க அடுத்த படத்தோட ஹீரோ உதயநிதி வருவாருன்னு எதிர் பார்த்தேன். ஆனா ஜீவாவே ‘சிவா’வா வந்து கடனை தீர்த்துட்டாரு.
படத்துல நோட் பண்ண வேண்டிய ஒரு பொன்மொழி “பொண்ணுங்களை பொறுத்த வரைக்கும் பசங்க பல வகை. அதிகமா பேசினா போர் பார்ட்டி, பேசவேயில்லனா சாம்பார், சிரிச்சு சிரிச்சு பேசினா ஜொள்ளு, சிரிக்கலைனா பிதாமகன், இங்லீஷ்ல பேசினா பீட்டரு, தமிழ்ல பேசினா லோக்கலு. ஆனா பசங்களுக்கு - பொண்ணுங்க ரெண்டே வகை. ஒண்ணு சூப்பர் ஃபிகரு, இன்னொன்னு சப்ப ஃபிகரு” - நோட் பண்ணிகிட்டீங்களா?
பாஸ் என்கிற பாஸ்கரன் - நல்லதம்பி என்கிற சந்தானம்…